Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவை பற்றி ஷாமா முகமது சொன்ன அந்த விஷயம் உண்மையா? கேப்டன்சி ரெக்கார்டை பார்ப்போம்

துபாய்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாமா முகமது, ரோஹித் சர்மாவைப் பற்றி வெளியிட்ட விமர்சனம் கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பி உள்ளது. அதற்கு மீண்டும் விளக்கம் அளித்துள்ள அவர் தான் ரோஹித்தின் கேப்டன்சி பற்றி மட்டுமே விமர்சித்து இருப்பதாகவே கூறி இருக்கிறார். அதற்கான பதில் தான் இந்த செய்தி.

முதலில் ஷாமா வெளியிட்ட பதிவு என்ன? அதற்கு வந்த எதிர்வினை மற்றும் மீண்டும் ஷாமா அளித்த விளக்கம் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம். ஷாமா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ரோஹித் சர்மாவை ஒரு விளையாட்டு வீரராக பார்க்கும்போது அதிக எடையுடன் இருப்பதாகவும், அவர் தனது எடையை குறைக்க வேண்டும் எனவும், இந்தியா இதுவரை கண்டிராத மோசமான கேப்டனாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

IND vs AUS Champions Trophy 2025 Rohit Sharma India 2025

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ரோஹித் சர்மாவை அவர் கேலி செய்வதாக பலரும் கூறி அவரை திருப்பி விமர்சித்தனர். அந்தப் பதிவை அவர் இப்போது நீக்கிவிட்டார். கிரிக்கெட் உலகை சார்ந்த பலரும், ரோஹித் அதிக உடல் எடையுடன் இருந்தாலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்றும், அதற்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பெரிய அளவில் சம்பந்தமில்லை என்பதையும் பலரும் கூறிவிட்டனர். ஆனாலும், ஷாமா முகமது தான் ரோஹித்தின் கேப்டன்சியை பற்றி மட்டுமே விமர்சனம் செய்ததாக மீண்டும் விளக்கம் அளித்து இருக்கிறார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா உண்மையிலேயே கேப்டனாக மோசமாக செயல்பட்டு இருக்கிறாரா என்பதை அவரது கேப்டன்சி ரெக்கார்டை வைத்து பார்க்கலாம். இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்களில் வெற்றிகளின் அடிப்படையில் ரோஹித் சர்மா தான் மிகச் சிறந்த கேப்டன் ஆவார்.

ஏனெனில், இதற்கு முன் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக பார்க்கப்பட்ட சவுரவ் கங்குலி, தோனி மற்றும் விராட் கோலியை விட ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் சமீபத்தில் சரிவை சந்தித்து இருந்தார். மற்றபடி ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மற்ற கேப்டன்களை விட அவர் அதிக போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 49 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இதில் அவர் வெற்றி சதவீதம் 79.83 ஆகும். டி20 போட்டிகளில் தோனியின் வெற்றி சதவீதம் 59.28, விராட் கோலியின் வெற்றி சதவீதம் 64.58 ஆகும்.

இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 40 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித்தின் வெற்றி சதவீதம் 76.41 என்பதாகும். தோனியின் வெற்றி சதவீதம் 59.52 என்பதாகவும், விராட் கோலியின் வெற்றி சதவீதம் 70.43 என்பதாகவும், சவுரவ் கங்குலியின் வெற்றி சதவீதம் 53.90 என்பதாகவும், ராகுல் டிராவிட்டின் வெற்றி சதவீதம் 56 என்பதாகவும் உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அதில் 12 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இதில் அவரது வெற்றி சதவீதம் 50 ஆகும். இதில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளால் தான் அவரது வெற்றி சதவீதம் வெகுவாக சரிந்தது. அதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட சிறந்த கேப்டன்சி ரெக்கார்டை வைத்திருந்தார் ரோஹித் சர்மா.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட செயல்பாடும் கேப்டன்சியும் சரிவை சந்தித்து உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது சமீபத்தில் நடந்த ஒரு விஷயம் தான். அது பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் இது கிடையாது. தற்போது சாம்பியன் டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் மூன்று போட்டிகளிலும் ரோஹித் தலைமையில் அபாரமாக வெற்றி பெற்று இருக்கும் நிலையில், ஷாமா முகமது தேவையற்ற முறையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பற்றி விமர்சித்து இருக்கிறார்.

அதுதான் இங்கே சர்ச்சையாக மாறி உள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன் இதே கேப்டன் தான் இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Story first published: Tuesday, March 4, 2025, 11:49 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+