அந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க! ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை தந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்
மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடர் முதல் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள் என ஆஸ்திரேலியா அணியிடம் அந்நாட்டு வீரர் வாட்சன் ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாட்சன்,ஒரு விஷயம் மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது. விராட் கோலி ரன் சேர்க்க வேண்டும் என்ற நெருப்புத் தீ அவரிடம் இருக்கின்றது. அந்த வேட்கையில் அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

விராட் கோலி களத்தில் கொண்டு வரும் உத்வேகமும், அவரை ஒரு சூப்பர் மேன் போல் மாற்றி விடுகிறது. ஆனால் கடந்த சில சமயங்களாக விராட் கோலியிடம் அந்த தீயை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஒரே மாதிரியான உத்வேகத்தை தொடர்ந்து ஒருவரால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
இதனால் விராட் கோலி இடம் உள்ள காட்டுத்தீயை யாரும் வெளியே கொண்டு வர வேண்டாம். அப்படி அவரை வம்பு இழுத்து கோலி மீண்டும் வெறிகொண்டால் அது நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு தான் தீமையாக அமையும். அதன் பிறகு ஒவ்வொரு பந்திலும் அவர் தீவிரமாக எதிர்கொண்டு செயல்படுவார்.
விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியதற்கு காரணம், களத்தில் நடக்கும் சில விஷயங்கள் தான். எங்கள் அணி வீரர்கள் அவரிடம் வாய் கொடுப்பார்கள். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தும். இதேபோல் பேட்டிங் செய்யும்போது அவர் கடும் உத்வேகத்துடன் பந்தை கவனிப்பார்.
அவருடைய கவனம் பந்தில் மட்டுமே இருக்குமே தவிர கவனச்சிதறல் ஏற்படவே ஏற்படாது. அப்படி ஒரு நிலை வந்தால் அவர் சிறப்பாக ரன் குவிப்பார். ஆனால் அவரைச் சுற்றி எந்த ஒரு விமர்சனமும், எந்த ஒரு ஸ்லெஜிங்கும் நடைபெறவில்லை என்றால் அவர் சாதாரண ஒரு கோலியாக தான் விளையாடுவார். ஆனால் ஆஸ்திரேலியா ரசிகர்களை பொறுத்தவரை இந்த கோலியை தான் எதிர்பார்ப்பார்கள் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications