Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் வலி.. பாதி போட்டியில் மருத்துவமனைக்கு விரைந்த மூத்த வீரர்.. அதிர்ச்சியில் இந்திய அணி!

Recommended Video

பாதி போட்டியில் வெளியேறிய தவான்... அதிர்ச்சியில் இந்திய அணி! | Shikar Dhawan injured badly

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பீல்டிங் செய்த போது காயம் அடைந்தார்.

வலியில் துடித்த அவர் பின் பீல்டிங் செய்ய வரவில்லை. அவர் "எக்ஸ் ரே" எடுக்க மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக பிசிசிஐ தகவல் தெரிவித்தது.

அதனால், முக்கியமான போட்டியில் ஒரு முக்கிய பேட்ஸ்மேன் காயம் அடைந்ததை கண்டு இந்திய அணி அதிர்ச்சியில் உள்ளது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆடுகளம் சேஸிங் செய்ய கடினமாக இருக்கும் என்ற நிலையில், இந்தியாவை சேஸிங் செய்ய வைத்தது ஆஸ்திரேலியா.

ஸ்டீவ் ஸ்மித் சதம்

ஸ்டீவ் ஸ்மித் சதம்

அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். லாபுஷாக்னே 54 ரன்கள் எடுத்தார். எனினும், அந்த அணியால் 300 ரன்களை எட்ட முடியவில்லை. அதே சமயம், இந்திய அணிக்கும் பேட்டிங்கில் சிக்கல் இருந்தது.

தவான் காயம்

தவான் காயம்

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில், தவான் காயமைடந்து இருந்தார். அவர் உடலில் பந்து தாக்கியதால் பலத்த காயம் அடைந்த அவர் அந்தப் போட்டியிலேயே பீல்டிங் செய்யவில்லை.

மீண்டும் காயம்

மீண்டும் காயம்

இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வலியுடன் தான் பங்கேற்றார் தவான். அவர் 10வது ஓவரில் பீல்டிங் செய்த போது பந்தை தடுக்க கீழே பாய்ந்தார். அப்போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

கவலையில் கேப்டன்

கவலையில் கேப்டன்

கடும் வலியால் துடித்த அவர் உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். தவான் பேட்டிங் செய்யாவிட்டால் இந்திய அணி கடும் பிரச்சனையில் சிக்கும் என்பதால் கேப்டன் விராட் கோலி அப்போதே கவலையில் ஆழ்ந்தார்.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

தவானுக்கு பதில் சாஹல் பீல்டிங் செய்து வந்தார். 50 ஓவர் முழுவதும் தவான் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. இந்த நிலையில், பிசிசிஐ தவான் காயம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

என்ன அறிவிப்பு?

என்ன அறிவிப்பு?

அதில் ஷிகர் தவான் காயம் காரணமாக மருத்துமனைக்கு சென்று ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர் மீண்டும் வந்தவுடன், அவரை பேட்டிங் ஆட வைப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் கூறி இருந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சி அளித்தது. ஒருவேளை தவான் துவக்கம் அளிக்காவிட்டால் ராகுல் துவக்கம் அளிப்பார். எனினும், இந்தியா ஒரு பேட்ஸ்மேன் குறைவாக ஆட வேண்டிய நிலை ஏற்படும்.

ரோஹித் காயம்

ரோஹித் காயம்

கடந்த போட்டியில், தவான் மட்டுமல்ல, ரோஹித் சர்மாவும் காயம் அடைந்தார். அவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வலியுடன் ஆடி வருகிறார். அவர் பீல்டிங் செய்த போது சில சமயம் பந்தை மெதுவாக வீசவே முயன்றார்.

சிக்கலில் இந்திய அணி

சிக்கலில் இந்திய அணி

எனவே, இந்திய அணி கடும் சிக்கலில் தான் சேஸிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது ஒருபுறமிருக்க இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

பும்ரா கட்டுகோப்பாக பந்து வீசி 38 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தி 44 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஷமி 4, குல்தீப் 1, சைனி 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Sunday, January 19, 2020, 17:33 [IST]
Other articles published on Jan 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+