Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஹர்சித் ராணாவை ஏன் வைத்திருந்தோம் என்று இப்போ தெரியுதா? கேப்டன் கில் தடாலடி

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

236 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாச்,விராட் கோலி அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 38.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது.

Shubman gill

இது குறித்து பேசிய கேப்டன் கில், இந்த ஆட்டம் எங்களுக்கு ஒரு சிறந்த ஆட்டமாகவே அமைந்தது. ஆஸ்திரேலியா அணி நல்ல தொடக்கத்தை பெற்றார்கள். ஆனால் நாங்கள் நடு ஓவர்களும் சிறப்பாக பந்துவீசி, அவர்களை கட்டுப்படுத்தினோம். இதன் மூலம் ஆட்டத்திற்குள் நாங்கள் மீண்டும் வந்தோம்.

ஹர்ஷித் ராணா அபாரமாக பந்து வீசினால் அதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நடு ஓவர்களில் எங்கள் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களும் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஹர்சித் ராணா எப்போதுமே தேவைப்படும் நேரத்தில் எங்களுக்கு மிக வேகமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பார்.

இது போன்ற ஆடுகளங்களில் ஹர்ஷித்ராணா போல் வேகமாக பந்து வீசக்கூடிய ஒரு வீரர் வேண்டும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் எங்கள் அணிகளுக்காக பல ஆண்டுகள் விளையாடி இதுபோல் வெற்றியை தேடி தருகிறார்கள்.

இருவரும் இணைந்து பேட்டிங் செய்வதை பார்க்கும்போது அவ்வளவு பிரமிப்பாக இருந்தது.குறிப்பாக இருவரும் இணைந்து போட்டியை எங்களுக்காக முடித்துக் கொடுத்தார்கள்.கேப்டனாக முதல் வெற்றியை நான் பெற்று இருக்கிறேன். அதுவும் ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.

Story first published: Saturday, October 25, 2025, 16:51 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+