Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- சுப்மன் கில்லை அணியை விட்டு நீக்குங்க! ஆசியாவுக்கு வெளியே சுத்த வேஸ்ட்- EX வீரர் தாக்கு

பிரிஸ்பேன் : இந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த போது இந்திய அணி பேட்டிகள் தடுமாறி வந்தது.

குறிப்பாக இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ரோகித் சர்மா 10 ரன்களிலும் ஆட்டம் இருந்தனர். கே எல் ராகுல் மட்டும் தனியாக நின்று 84 ரன்கள் விளாசி அணியை காப்பாற்றினார்.

ind vs aus rohit sharma india vs australia vs

இறுதியில் ஜடேஜா தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 123 பந்துகளை எதிர் கொண்டு 77 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழ்ப்பிற்கு 252 ரன்கள் உடன் நான்காவது நாள் ஆட்டத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்து இருக்கிறது.

இந்த சூழலில் ஆசியாவுக்கு வெளியே சிம்மத்தில் மோசமாக விளையாடி வருவதால். அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கில் பற்றி நாம் அதிகம் பேச வேண்டும். கடந்த 16 இன்னிங்ஸ்களாக ஆசியாவுக்கு வெளியே ஒரு முறை கூட அவர் 40 ரன்கள் அடித்துள்ளார். பலமுறை அவர் சிங்கள் டிஜிட், ரன்களிலும் 20 30 ரன்கள் என அதிக முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்.

நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இவ்வாறு பேட்டிங் செய்தால் அது நிச்சயம் மிகப்பெரிய பிரச்சனையாக தான் இருக்கும். இது குறித்து இந்திய அணி நிர்வாகம் விவாதிக்க வேண்டும். கடந்த டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் செய்யும்போது ஃபார்மில் இருக்கிறார் என்பது போல் தான் தோன்றுகிறது. கில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அணி பேட்டிங்கும் இவ்வாறு தான் இருக்கிறது.

ஜெய்ஸ்வால் முதல் பந்தையே அடித்து ஆடி டிரைவ் செய்கிறார். இது நேராக பில்ண்டர் இடம் கேட்ச் ஆகிறது. இதே போல் கில்லும் அதிகமாக டிரைவ் செய்து ஆட்டம் இழக்கிறார். கில் டிரைவ் செய்யும் போது பார்க்க நன்றாக இருந்தாலும் அந்த ஷாட்டை பயன்படுத்தினால் நிச்சயம் ஸ்லீப்பில் நீங்கள் கேட்ச் ஆக வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் அடித்து ஆடவே பழக்கப்பட்டு விட்டீர்கள். அதனால் தான் உங்களால் அதனை நிறுத்த முடியவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கில் கடைசியாக 2020-21 ஆம் ஆண்டு இதே காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் குவித்தார். இதனால், இவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

Story first published: Tuesday, December 17, 2024, 16:52 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+