Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா விளையாடுவது முட்டாள்தனமான கிரிக்கெட்.. சிராஜ்,ரோகித்துக்கு யோசனையே இல்ல- சைமன் கேடிச் தாக்கு

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை தவிர மற்ற இந்திய அணி பவுலர்கள் தடுமாறி வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பும்ரா மட்டும்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.

மற்ற இரண்டு பந்துவீச்சாளர்களுக்கான சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் கடுமையாக தடுமாறி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 96 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் ஐந்து விக்கெட்டுகளை பும்ரா மட்டுமே வெறும் 72 ரன்களை விட்டுக் கொடுத்து வீழ்த்தி இருக்கிறார்.

ind vs aus jasprit bumrah india vs australia gabba test vs

ஆனால் சிராஜ் 20 ஓவர்களில் 84 ரன்களும், ஆகாஷ் தீப் 23 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள்.இந்த நிலையில் சிராஜ் பந்து வீசியபோது அதனை டிராவிஸ் ஹெட் அபாரமாக பவுண்டரி அடித்தார். இதனை நேரலையில் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த முன்னாள் வீரர் சைமன் கேடிச் கடுமையாக சாடி இருக்கிறார்.

அதாவது, பேட்ஸ்மேனுக்கு பின்புறம் பவுண்டரி லைனில் ஒரு ஃபில்டரை ரோகித் சர்மா நிறுத்தி இருந்தார்.
எனினும் சிராஜ் அந்த பில்டிங் செட்டப்புக்கு ஏற்ற வகையில் பந்து வீசவில்லை என்பதால் அந்த ஃபீல்டரை ரோகித் சர்மா நகர்த்திவிட்டார். இந்த நிலையில் அடுத்த ஓவரிலே சிராஜ் டிராவிஸ் ஹெட்டின் தலையைத் தாண்டி ஒரு சார்ட் பால் பந்து வீசினார். அதனை டிராவிஸ் ஹெட், அப்பர் கட் செய்தார்.

ind vs aus jasprit bumrah india vs australia gabba test vs

இந்த பந்து நேராக ரோகித் சர்மா எங்கு ஃபீல்டரை வேண்டாம் என்று நகர்த்தினாரோ, அங்கே விழுந்து பவுண்டரிக்கு சென்றது.இதனை கவனித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேடிச், இந்திய அணி முட்டாள்தனமான கிரிக்கெட்டை விளையாடுவதாக சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், கடந்த ஓவர் முன்பு வரை அங்கு ஒரு ஃபீல்டரை ரோகித் சர்மாவும் சிராஜும் நிறுத்தி இருந்தார்கள்.

ஆனால் அதற்கு ஏற்ற வகையில் சிராஜ் பந்து வீசவில்லை என்பதால் ரோகித் சர்மா நகர்த்திவிட்டார்.தற்போது அங்கு ஃபீல்டர் இல்லாத நிலையில் எதற்கு தேவையில்லாமல் ஷார்ட் பால் பந்தை வீசி இருக்கிறார். தற்போது அங்கு மட்டும் பில்டர் நின்று இருந்தால், அது கேட்ச் ஆகிருக்கும். திட்டமே இல்லாமல் ஏன் சிராஜுடன் ரோகித் சர்மாவும் இருக்கிறார்கள். இது இந்தியா விளையாடும் முட்டாள்தனமான கிரிக்கெட். ஹெட் எங்கெல்லாம் ரன் அடிப்பார் என இந்தியா ஃபீல்டர்களை ஒரு தருணம் நிறுத்துகிறார்கள். ஆனால் மறு தருணம் அங்கு ஆட்களே இல்லை. சிராஜுக்கு மூளை வேலை செய்யவில்லை என்று சைமன் கேடிச் சாடி இருக்கிறார்.

Story first published: Sunday, December 15, 2024, 13:24 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+