Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் விக்கெட் தான் தோல்விக்கு காரணமா? ஒரு சின்ன கோடு தான் வித்தியாசம்.. ரோஹித் சர்மா பேட்டி!

மெல்போர்ன்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ன் அட்டாக்கிங் பாணியிலான ஆட்டம் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ரிஷப் பண்ட் சூழலை புரிந்து கொண்டு ரிஸ்க் எடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை கவனமாக முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பொறுப்பில்லாத ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்த்துவிட்டு, அவருக்கு போதுமான ஓவர்கள் பவுலிங் கூட அளிக்கப்படவில்லை.

ind vs aus rishabh pant rohit sharma vs

அவரையும் பேட்ஸ்மேனாகவே கணக்கில் கொண்டு இந்திய அணி விளையாடியது. இதற்கு இந்திய அணி சுப்மன் கில்லுடன் களமிறங்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அவருக்கு என்ன வேண்டும் என்பதை விடவும் இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை ரிஷப் பண்ட் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதேபோன்ற அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளை தேடி கொடுத்துள்ளது. இதனால் ரிஷப் பண்ட் விக்கெட் எனக்கு குழப்பமான ஒரு சூழலை தான் கொடுக்கிறது. அவர் சிறப்பாக ஆடும் போது அவரை அப்படி விளையாட அனுமதிக்கிறோம்.

ஆனால் ரிஷப் பண்ட் பேட்டிங் சிக்கலை உண்டாக்கும் போது எரிச்சலடைகிறது. இதனை பேலன்ஸ் செய்ய வேண்டும். ஒரு கேப்டனாக ரிஷப் பண்ட் உடன் இதுகுறித்து ஆலோசிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் அவர் அப்படி விளையாடி வெற்றியை பெற்று கொடுத்துள்ளார். அதனால் சூழலை புரிந்து ரிஸ்க் எடுக்கலாமா வேண்டாமா என்று சரியான முடிவை எடுக்க வேண்டும்.

ரிஷப் பண்ட்-ன் ஆட்டத்தை நீண்ட நாட்களாகவே அறிவேன். அவரின் ஆட்டம் குறித்து விவாதங்கள் நடப்பது முதல்முறையல்ல. அதற்காக இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார் என்பதல்ல. ஆனால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதற்கு இடையில் ஒரு சிறிய கோடு மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தேநீர் இடைவேளைக்கு பின் இந்தியா அணி டிரா செய்யவே விளையாடுகிறது என்பது ரசிகர்களுக்கே புரிந்துவிட்டது. அப்போது ட்விராஸ் ஹெட்டை வைத்து ஆஸ்திரேலியா அணி ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்துவதற்காக ஒரு வலையை விரித்தது. அந்த வகையில் முதல் ஓவரிலேயே சிக்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய அணியை உடன் அழைத்து சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Monday, December 30, 2024, 15:03 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+