திருந்தவில்லை.. பண்டின் "கார்டை" நீக்கிய ஸ்மித்.. களத்தில் நடந்த பித்தலாட்டம்.. வெளியான ஷாக் வீடியோ!
சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த காரியம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய போராடி வருகிறது.
புஜாரா, பண்ட் அவுட்டான நிலையில் அஸ்வின், விஹாரி களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 127 ரன்கள் தேவை.

மோசம்
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த காரியம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. பொதுவாக பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது முதல் இரண்டு ஸ்டம்ப்களை மறைக்கும் வகையில் நிற்பார்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுக்கு ஏற்ற வகையில் இரண்டு அல்லது ஒரு ஸ்டம்ப்களை மறைத்து ஆடுவார்கள்.

எப்படி ?
இதற்காக பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிற்கு முன் தங்கள் காலை வைத்து கோடு போட்டு இருப்பார்கள். இதை கார்ட் என்று கிரிக்கெட் அழைப்பார்கள். இந்த கார்ட் மூலம்தான் பந்து எந்த லைனில் வருகிறது என்பது பேட்ஸ்மேன்கள் எளிதாக கணிப்பார்கள். எல்பிடபிள்யூ, போல்டை தவிர்க்க இந்த கார்ட்தான் உதவும்.
Rishabh Pant then returns and has to take guard again.#AUSvIND #AUSvsIND #AUSvINDtest pic.twitter.com/aDkcGKgUJC — Cricket Badger (cricket_badger) January 11, 2021 '>
நீக்கம்
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை ஸ்மித் அவருக்கு தெரியாமல் வந்து காலால் மாற்றி உள்ளார். பக்கத்திலேயே ஷூவால் இன்னொரு கோடு போட்டு பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை நீக்கி உள்ளார். பண்டை குழப்ப வேண்டும் என்பதற்காக இந்த பித்தலாட்டத்தை ஸ்மித் செய்துள்ளார்.

கேமரா
ஆனால் இதை கண்டுபிடித்த பண்ட் புதிய கார்டை போட்டார். ஸ்மித்தின் இந்த செயல் ஸ்டம்ப் கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்டை ஏமாற்றி குழப்ப வேண்டும் என்று ஸ்மித் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு உள்ளார். உப்புத்தாள் விவகாரத்தில் தடை பெற்ற ஸ்மித் கொஞ்சம் கூட திருந்தாமல் இப்போதும் களத்தில் மோசடி செய்ய முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications