Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- ஆஸ்திரேலியாவை கதறவிட்ட கவாஸ்கர்.. கடைசி நாள் வரை விறுவிறுப்பு! முடிவில் நடந்தது என்ன?

பிரிஸ்பேன் : 1977-78 ல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டது.முதல் டெஸ்ட் டிசம்பர் 1977 ல் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைப் பெற்றது.முடிவு வரையில் விறுவிறுப்பாக சென்றது.

ரிசல்ட் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இருந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரலிய அணி எடுத்த ரன்கள் 166. நான்கு வீரர்கள் இரட்டை இலக்கை அடைந்தனர்.

bgt 2024 ind vs aus virat kohli rohit sharma

13, 19, 19 , 82

பீட்டர் டூஹேய் அந்த அதிக பட்ச 82 ரன்கள் குவித்தார். பந்து வீச்சில் கேப்டன் பிஷன் பேடி 5 / 55இந்திய அணி பேட்டிங்கில் ஒரு அளவு தாக்குப் பிடித்து விளையாடியவர்கள் திலிப் வெங்சர்கார் 48, ஜி ஆர் விஸ்வநாத் 45.

இந்திய அணி ஆல் அவுட் 153.

வேனே கிளார்க் 4 / 46
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்டிங் மெச்சும் படி இருந்தது.
கேப்டன் பாப் சிம்ப்சன் அதிக பட்சமாக எடுத்த ரன்கள் 89
இந்த இன்னிங்சிலும் நின்று ஆடி அருமையாக ரன்கள் எடுத்தார் பீட்டர் டூஹேய். 57.

டேவிட் ஓகலைவ் எடுத்த ரன்கள் 46.
ஜெப் தாம்சன் எடுத்தது 41*
ஆக மொத்தம் அந்த அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பவுலிங்கில் இந்த முறை அசத்தியவர் மதன் லால். 5 / 72
341 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.

துவக்கம் அதிர்ச்சியை கொடுத்தது. ஸ்கோர்
7 / 1.

வெங்சர்கார் கிளார்க் வீசிய பந்தில் அவுட் ரன் 1. சுனில் கவாஸ்கருடன் ஜோடி சேர்ந்த மொஹிந்தர் அமர்நாத் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பில் எடுத்த ரன்கள் 81.

அடுத்து ஆடிய விஸ்வநாத் குவித்த ரன்கள் 35.தொடர்ந்து ஆடி நம்பிக்கை அளித்து வந்த ஒபனிங் வீரர் சுனில் கவாஸ்கர் சதம் எடுத்தார்.
அவர் அவுட் ஆகும் பொழுது இந்திய அணியின் ஸ்கோர்
243 / 6.

சுனில் கவாஸ்கர் எடுத்தது 113.
எதிர் கொண்ட பந்துக்கள் 264 (12 x 4 )
அருமையான பேட்டிங் ஆட்டத்தை வெளிப் படுத்திய கிர்மானி எடுத்த ரன்கள் 55.

வெற்றி இலக்கை நெருங்க பெரிதும் உதவியது.

மறுபடியும் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் வேனே கிளார்க். இந்த முறை
4 / 101

ஜெப் தாம்சன் எடுத்தது 4 / 76

சிறப்பாக வெற்றி இலக்கை அடைய முன்னேறிய படி இருந்த இந்திய அணி எதிர் பாராத விதமாக ஆல் அவுட் ஆனது.

324 ரன்கள்.

இந்த டெஸ்டில் ஆஸ்தி ரேலிய அணியில் அறிமுக ஆட்டக்காரர்கள் 6 வீரர்கள்.முடிவில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலிய அணி வெற்றியை பதிவு செய்தது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, November 19, 2024, 20:27 [IST]
Other articles published on Nov 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+