Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் யாதவ் அறிமுகம்.. டாஸில் நடந்த ட்விஸ்ட்.. தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி.. தப்பிக்குமா

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. இந்தியாவின் ப்ளேயிங் 11ல் 2 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கடைசி நேரத்தில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிட்ச்-ன் தன்மைகளை மாற்றிக்கொண்டிருந்த சூழலில் தற்போது டாஸில் தோற்றுள்ளதால் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

நாக்பூர் பிட்ச் முதலில் பேட்டர்களுக்கும் சற்று ஆதரவாக இருந்த சூழலில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதால், முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு ஆதரவாக மாறியுள்ளது. எனவே நேரம் போக போக பிட்ச்-ல் ஏகபோகத்திற்கு ஸ்பின் அதிகரிக்கும். இதனால் முதல் 2 நாட்களுக்குள் ரன்களை அடித்துக்கொண்டால் தான் நல்லது. முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா ஒன்றரை நாட்கள் பேட்டிங் செய்துவிட்டால் பின்னர் இந்தியாவுக்கு சிரமம் தான். இந்திய அணி டாஸை பெரிதாக நம்பியிருந்த நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

இந்திய அணியின் டாப் ஆர்டரை பொறுத்தவரையில் ஓப்பனிங் வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களுக்கு பின் சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவும், விராட் கோலியும் அணிக்கு பலம் சேர்த்துள்ளனர். ரிஷப் பண்ட்-ன் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய இஷான் கிஷான் - கே.எஸ்.பரத் இடையே போட்டி நிலவி வந்த சூழலில் பரத் வெற்றி கண்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்காக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்-ஐ போல அதிரடியாக ஆடுபவர் தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் 8ல் 6 வீரர்கள் இடதுகை வீரர்கள் ஆகும். எனவே அஸ்வினுக்கு நல்ல வேட்டை உள்ளது. மறுபுறம் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ள ரவீந்திர ஜடேஜா கம்பேக் கொடுக்க காத்துக்கொண்டுள்ளார். சுழலுக்கு ஏற்ற பிட்ச் என்பதால் 3வது ஸ்பின்னராக அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். பேட்டிங்கிற்கும் உதவுவார் என்பதால் அக்‌ஷரை தேர்வு செய்துள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

பவுலிங்கில் 3 இடங்களை ஸ்பின்னர்கள் ஆக்கிரமித்துக்கொண்ட நிலையில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் வேகப்பந்துவீச்சிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆட்டத்தின் குறிப்பிட்ட நேரங்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்த சமயத்தில் இவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் கே.எஸ்.பரத், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ்

Story first published: Thursday, February 9, 2023, 9:28 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+