IND vs AUS - இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் சேர்ப்பு.. எஞ்சிய 2 டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு
கவுகாத்தி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக்சாகர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் இன்னும் ஐந்து மாதத்தில் இந்தியா விளையாட உள்ள போட்டிகளை வைத்து அணியை கட்டமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்ற வேக பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இந்திய அணியில் இருந்து முகேஷ் குமார் விலகி இருக்கிறார். இதனால் அவருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணியை நட்சத்திர வீரர் தீபக்சாகர் சேர்க்கப்பட்டிருக்கிறார். தீபக்சாகர் பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறந்து விளையாட கூடியவர்.
இதனால் தீபக் சாகர் அணிக்கு திரும்பினால் அது இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.இந்த கடைசி இரண்டு டி20 போட்டியில் நிச்சயம் தீபக்சாகர் இடம் பெறுவார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தீபக்சாகர் நிச்சயம் விளையாடுவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பந்து வீச்சில் தொடக்கத்தில் நன்றாக ஸ்விங் செய்யும் தீபக்சாகர் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்திருக்கிறார்.
இதேபோன்று பேட்டிங்களும் 20, 30 ரன்கள் அதிரடியாக விளையாடி சேர்ப்பார். இந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் தீபச்சாகர் காயம் காரணமாக இடம்பெற முடியவில்லை. இதனால் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஏற்கனவே இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான், சிவம் துபே போன்ற வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, November 28, 2023, 19:36 [IST]
Other articles published on Nov 28, 2023


Click it and Unblock the Notifications