Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திர சாதனை.. ஆஸ்திரேலிய மண்ணில் எந்த இந்திய பந்துவீச்சாளரும் தொடாத புதிய உச்சம் தொட்ட பும்ரா

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியின் கேப்டனும், வேகப் பந்துவீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா மாபெரும் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.

இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஐந்தாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 47 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்தார்.

ind vs aus jasprit bumrah india vs australia test match

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். 1977ஆம் ஆண்டு பிஷன் சிங் பேடி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் 31 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 47 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுஷேன் விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.

இதை அடுத்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. இதன் மூலம் பும்ரா இந்த தொடரில் மொத்தமாக 32 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து முகமது சிராஜ் 12வது ஓவரில் அடுத்தடுத்து சாம் கான்ஸ்டாஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் -

32 - ஜஸ்பிரித் பும்ரா - 2024/25
31 - பிஷன் சிங் பேடி - 1977/78
28 - பி எஸ் சந்திரசேகர் - 1977/78
25 - ஈ ஏ எஸ் பிரசன்னா - 1967/68
25 - கபில் தேவ் - 1991/92

Story first published: Saturday, January 4, 2025, 7:14 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+