ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்
சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆசஸ் தொடர், டி20 உலக கோப்பை 50 ஓவர் உலகக் கோப்பை என கடந்த சில ஆண்டுகளில் அனைத்து கோப்பையுமே கைப்பற்றி இருக்கிறது. ஆனால் அவர்களால் கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் பாஸ்கர் தொடரை மட்டும் கைப்பற்ற முடியவில்லை.
குறிப்பாக தங்களது சொந்த மண்ணிலேயே கடந்த இரண்டு முறை இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங்கும் பந்துவீச்சும் பலமாக இருந்ததுதான்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலியா மண்ணில் டெண்டுல்கர் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 1809 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் ஆறு சதம், ஏழு அரை சதம் அடங்கும். டெண்டுல்கர் ஆஸ்திரேலியா மண்ணில் சராசரியாக 53 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் விராட் கோலி. கோலி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி மொத்தமாக 1352 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், நான்கு அரை சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் லக்ஷ்மன் இருக்கின்றார். லக்ஷ்மன் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி மொத்தமாக 1236 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். மொத்தமாக 1166 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சேவாக் இருக்கின்றார்.
சேவாக் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி மொத்தமாக 1031 ரன்கள் அடித்திருக்கின்றார். தற்போது இருக்கும் இந்திய அணியில் விராட் கோலி மட்டும் தான் ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் அடித்திருக்கிறார். கோலிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது இருக்கும் இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் தான்.
ஏழு டெஸ்ட் போட்டிகளில் அவர் 624 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் இரண்டு அரை சதம் அடங்கும். சராசரியை 62 என்ற அளவில் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 408 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். சராசரி வெறும் 31 என்ற அளவில் தான் இருக்கின்றது. இதனால் இந்த மூன்று வீரர்களும் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற முடியும்.


Click it and Unblock the Notifications