Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ட்ராவிஸ் ஹெட்டிற்கு காயமா? பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடுவாரா.. என்ன நடந்தது?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியானது. இதன்பின் ட்ராவிஸ் ஹெட்-க்கு ஏற்பட்டுள்ள காயம் சிறிய அளவிலானது என்றும், அடுத்தப் போட்டிக்குள் குணமடைந்து தயாராகிவிடுவார் என்று தெரிய வந்துள்ளது.

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ட்ராவிஸ் ஹெட்-க்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அடுத்த டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹேசல்வுட் காயம் காரணமாக விலகிய நிலையில், ட்ராவிஸ் ஹெட்டும் காயம் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ind vs aus rohit sharma kl rahul

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கனமழை காரணமாக டிராவில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் அபார சதம் காரணமாக 445 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதன்பின் 4வது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரின் அபார அரைசதம் காரணமாக ஃபாலோ ஆனை தவிர்த்தது. இறுதியாக 5வது நாளில் இந்திய அணி 260 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதன்பின் இந்திய அணி 8 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டது. இதன்பின் மழை தொடர்ந்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் ஆட்டநாயகன் விருது ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட்-க்கு அளிக்கப்பட்டது. இதனிடையே ட்ராவிஸ் ஹெட்-க்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியது.

இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் நிம்மதியடைந்தனர். ஏற்கனவே ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், ட்ராவிஸ் ஹெட் விலகினால் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். இதன்பின் ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், சிறிய காயம் தான். அடுத்தப் போட்டிக்குள் குணமடைந்து தயாராகுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, December 18, 2024, 22:17 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+