Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இப்படி நடந்தால் யாரும் ஆச்சரியப்படாதீர்கள்- கவாஸ்கர்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. இருவரும் 2021 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா எட்டு நாட்களிலும், விராட் கோலி டக்அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தன. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது.

Ind vs aus Virat kohli Rohit sharma

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர், பெர்த் ஆடுகளத்தில் பவுன்ஸ் மிகவும் அதிகமாக இருந்தது. இது எப்போதுமே வீரர்களுக்கு சுலபமாக இருக்காது. அதுவும் சர்வதேச கிரிக்கெட்டை சில மாதங்களாக இரு வீரர்கள் விளையாடாத நிலையில் அந்த மைதானத்தில் பந்துகளுக்கு எதிர்கொள்ளும் போது நிச்சயம் தடுமாறுவார்கள்.

அவ்வளவு ஏன் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கே பெர்த் ஆடுகளம் கடும் சவால்களை கொடுத்தது. முதல் ஒருநாள் போட்டியில் நாம் தோல்வியை தழுவினாலும் நாம் உண்மையிலேயே மிகவும் சிறந்த அணி. இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் அதிக ரன்கள் அடித்தால் ரசிகர்கள் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

அவர்கள் களத்தில் அதிக நேரம் செலவிட்டு வலைப்பயிற்சியில் அதிக நேரம் பந்துகளை எதிர் கொண்டால், நிச்சயம் அவர்கள் தங்களுடைய பார்மை மீட்பார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் ரன்களை குவிக்க தொடங்கினால் இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்கள் தாண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம் ஆகும். இங்கு விராட் கோலி 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 244 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 61 ஆகும். இந்த மைதானத்தில் இரண்டு சதமும் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் அடித்திருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் இதே மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடி 537 ரன்கள் அடித்து இருக்கிறார். அதில் மூன்று சதம் அடங்கும்.

Story first published: Tuesday, October 21, 2025, 7:21 [IST]
Other articles published on Oct 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+