மும்பை : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வெற்றிகரமான கேப்டனில் விராட் கோலி ஒருவராக திகழ்கிறார். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் நல்ல யுக்திகளை வகுத்து விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவர். இது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் இந்திய அணி பந்து வீசியது. போட்டி சமனை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் நாம் வலுவான நிலையில் இருந்தோம் என்ற திமிர் இருந்தார்கள். அவர்களுடைய உத்வேகத்தை குலைக்கும் விதமாக இந்திய அணி அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது.

இந்த நிலையில் டிராவிஸ் ஹெட் களத்தில் இருந்தார். அப்போது முகமது சிராஜ் அவருக்கு பந்து வீசினார். அப்போது சிராஜ் பந்துவீச்சு முனையில் இடது பக்கத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசினார். இதை பார்த்த ரோகித் சர்மா நீ வலது பக்கம் ஓடி வந்து பந்து வீசு என்று கூறினார்.
இதை கவனித்த விராட் கோலி, இல்லை வேண்டாம். சிராஜ் சரியான முறையில் தான் பந்து வீசுகிறார். பந்து கொஞ்சம் கரடு முரடாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் சிராஜ் இடது பக்கத்தில் இருந்து பந்து வீசும் போது அது டிராவிஸ் ஹெட்டுக்கு நெருக்கடியை கொடுக்கும். அவர் ஆட்டம் இழக்க வாய்ப்பு இருக்கிறது என்று கோலி அறிவுரை கூறினார். இதனை அடுத்து ரோகித் சர்மாவும் கோலியின் முடிவுப்படியே பந்து வீசு என சிராஜுடம் கூறினார்.
இதனை அடுத்து அதே ஓவரிலே ட்ராவிஸ் ஹெட்டில் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தி அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறந்த கேப்டனாக விளங்குவார் என்று பாராட்டியுள்ளனர்.
ரோகித் சர்மா டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு தான் லாய்க்கு என்றும் டெஸ்ட் போட்டிக்கு கிங் கோலி தான் பெஸ்ட் கேப்டன் என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவை குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதுபோல் விராட் கோலியும்,ரோகித் சர்மாவும் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனாக இருக்கின்றது. நான்காவது டெஸ்ட் வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது.