Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன்! இந்தியா போராடும் நிலையில், கோலி செய்த சம்பவம்..ரசிகர்கள் நெகிழ்ச்சி

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வரும் நிலையில் விராட் கோலி செய்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி நான்காவது நாள் மதியநேர உணவு இடைவெளியின் போது ஆறு விக்கெட் இழ்ப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க 79 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றது.

ind vs aus virat kohli rohit sharma india vs australia vs

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு கடந்த மூன்று இன்னிங்ஸ்களாக தடுமாறி வருகிறார். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டம் இழக்க, பந்தை தேவையில்லாமல் அடிக்க முற்பட்டு விராட் கோலி கேட்ச் ஆனார்.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மற்ற வீரர்கள் எல்லாம் டிரெஸ்ஸிங் ரூமில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விராட் கோலி மட்டும் கையில் பேட்டை எடுத்துக்கொண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் உள்ள வலை பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும் என்றால் கூட விராட் கோலி அதிக அளவு பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவிக்க வேண்டும்.தன்னுடைய வீக்னஸை சரி செய்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால், விராட் கோலி தற்போது தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இதை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

விராட் கோலி ரன் அடிப்பதற்காக கடும் முயற்சி செய்கிறார். அதற்கான பலனை கடவுள் கொடுக்க வேண்டும் என்று பலரும் உருக்கமாக கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் சமன் செய்ய வேண்டும் என்றால் ஜெய்ஸ்வால், கோலி, கில் ஆகிய மூன்று வீரர்களில் யாராவது ஒருவர் பெரிய சதம் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியில் செய்வதை கோலி உண்மையான மேட்ச்சில் பிரதிபலிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாகவும் இருக்கின்றது.

Story first published: Tuesday, December 17, 2024, 9:08 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+