Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு புதிய பொறுப்பு! கோர்த்து விட்ட முன்னாள் வீரர்.. பலன் அளிக்குமா இந்த முடிவு!

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 48 மணி நேரமே இருக்கின்றது .22 ஆம் தேதி பெர்த் நகரில் இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறந்ததால் அவர் ஆஸ்திரேலியா வரவில்லை.

இந்த சூழலில் நட்சத்திர வீரர் கில்லிற்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நம்பர் மூன்றாவது வீரர் என்பது மிகவும் முக்கியமான இடமாகும்.

ind vs aus virat kohli rohit sharma r ashwin

மூன்றாவது வீரர் புதிய பந்தை அதிக அளவு எதிர்கொண்டு அதனை பழையதாக்கும் முயற்சியில் ஈடுபடுவார். நம்பர் மூன்றாவது வீரர் எவ்வளவு பந்துகளை எதிர்கொள்கிறாரோ, அதை பொறுத்துதான் ஒரு அணியின் ஸ்கோர் இருக்கும். டிராவிட், புஜாரா போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என பிறந்து வளர்ந்து வீரர்கள் தான் மூன்றாவது இடத்தில் விளையாடுவார்கள்.

இந்த சூழலில் இந்திய அணியின் இளம் வீரர்களின் நல்ல திறமை உடையவராக கருதப்பட்ட கில்லும் தற்போது இல்லை. இதனால் படிக்கல்லை வைத்து மூன்றாவது இடத்தை பூர்த்தி செய்ய கம்பீர் யோசித்து வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத், கில் இல்லாத நிலையில் விராட் கோலிக்கு நம்பர் மூன்றாவது இடத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலி இந்திய அணியில் இருக்கும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் மூன்றாவது இடத்தில் விளையாடி அதிக ரன்களை குவித்திருக்கிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலிக்கு நம்பர் மூன்றாவது வீரராக வாய்ப்பு வழங்க வேண்டும்.

மூன்றாவது இடத்தில் விளையாடி கோலி சரியாக விளையாடவில்லை என்றால் உடனடியாக நாம் கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்வார்கள். ஆனால் தற்போது கோலியை விட சிறந்த வீரர் கிடையாது. கோலி இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை ஆடி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் அவர் தனது பார்மை மீட்பார் என நினைக்கின்றேன். விராட் கோலிக்கு எப்போதுமே சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

எனவே ஆஸ்திரேலியா சவாலை விராட் கோலி சிறப்பாக எதிர்கொள்வார் என்று கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். இந்த நிலையில் விராட் கோலி இதுவரை நம்பர் மூன்றாவது வீரராக 8 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 167 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். இதனால் கீர்த்தி ஆஷாத்தின் இந்த ஆலோசனை விராட் கோலியை சிக்க வைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, November 19, 2024, 18:46 [IST]
Other articles published on Nov 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+