Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி என்ன தவறு செய்தாய்.. ஏன் நம்பர் 3ல் அனுப்பினார்கள்? கேஎல் ராகுலை நக்கல் செய்த நேதன் லயன்!

மெல்போர்ன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் நம்பர் 3 பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன், என்ன தவறு செய்தாய் என்று உன்னை நம்பர் 3ல் பேட்டிங் செய்ய அனுப்பி இருக்கிறார்கள் என்று கிண்டலாக பேசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களை விளாசி அசத்தினார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ind vs aus rohit sharma kl rahul vs

இதன்பின் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த 3 ஆட்டங்களாக கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்து வந்த நிலையில், திடீரென ரோஹித் சர்மா களமிறங்கியது அதிர்ச்சி அளித்தது. இதனால் கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசை குறித்த குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்தது.

தொடக்க வீரராக 3 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 2 அரைசதங்கள் உட்பட 235 ரன்களை விளாசி இருந்தார். இதனால் கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசையை மாற்றக் கூடாது என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் கூறியிருந்தனர். ஆனால் ரோஹித் சர்மா ரன்களை சேர்க்க முடியாமல் திணறி வருவதால், மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கினார்.

ஆனால் இம்முறையும் 3 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேற, உடனடியாக கேஎல் ராகுல் களம் புகுந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கேஎல் ராகுலே தொடக்க வீரராக களமிறங்கி இருக்கலாம் என்று கூறினர். இந்த நிலையில் கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய க்ரீஸில் தயாராகிய போது, அவர் அருகே சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் வந்தார்.

அப்போது அவர், நம்பர் 3ல் பேட்டிங் செய்யும் அளவிற்கு அப்படி என்ன தவறு செய்தாய்? என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்தார். நேதன் லயனின் வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி ஒலிபரப்பாகியது. இதனைத் தொடர்ந்து வர்ணனையாளர்களும் கேஎல் ராகுல் நம்பர் 3ல் களமிறங்கியது குறித்து விவாதிக்க தொடங்கினார்கள். நம்பர் 3ல் களமிறங்கிய கேஎல் ராகுல் 42 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒவ்வொரு முறையும் இந்திய அணியில் கேஎல் ராகுல் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவிற்கு ரன்களை குவிக்கும் போதும், கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசை மட்டும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு கொண்டே இருக்கிறது. தொடக்க வீரர், நம்பர் 3, நம்பர் 4, நம்பர் 5, நம்பர் 6 என்று டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசை ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் மாற்றப்பட்டு கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 27, 2024, 10:44 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+