For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிட்னி டெஸ்டில் வெற்றி பெற இந்தியா என்ன செய்யனும்? கோலி, ரோகித், ராகுல் இதை செய்தால் போதும்!

சிட்னி : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறும் போட்டியில் இந்தியா தொடர்ந்து நீடிக்க முடியும்.

ஒரு வேளை இந்த போட்டி சமனில் முடிந்தாலோ இல்லை ஆஸ்திரேலிய வெற்றி பெற்றாலும், தொடரையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பையும் இந்தியா இழக்கும். இதனால் ரோஹித் சர்மா,விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ind vs aus sydney test rohit sharma virat kohli vs


சிட்னி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்தியா கடந்த காலங்களில்
இங்கு சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது. இதுவரை 13 டெஸ்ட் போட்டி விளையாடி உள்ள இந்திய அணி ஒரு வெற்றி, ஏழு டிரா, 5 தோல்வியை கண்டு இருக்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் தற்போது இருக்கும் இந்திய அணியில் ரிஷப் பண்ட் தான் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்.

இதுவரை மூன்று இன்னிங்ஸ் விளையாடி ரிஷப் பன்ட் 292 ரன்கள் அடித்துள்ளார். தற்போது இருக்கும் அணியில் அதிக விக்கெட் எடுத்து இருப்பவர் ஜடேஜா. இரண்டு இன்னிங்ஸின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதை போன்று இந்திய அணி கடந்த மூன்று முறை இங்கு விளையாடி போட்டியை டிரா செய்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கையில் தான் இருக்கிறது. டாப் ஆர்டரில் இருக்கும் ஒரு வீரர் பெரிய சதமும், மற்றொரு வீரர் அரை சதமும் அடிக்க வேண்டும். முதல் இன்னிங்சில் இந்திய அணி குறைந்தபட்சம் 400 ரன்கள் கடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும்.

குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா,கே எல் ராகுல், பண்ட் உள்ளிட்ட வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு இன்னிங்சில் 100 பந்துகளை ஆவது விளையாட வேண்டும். சிட்னி ஆடுகளம் முதலில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், பந்து பழையதாக மாறியவுடன் இங்கு ரன்கள் அதிகமாக கிடைக்கும். கடந்த 2004 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் அடிக்காமல் 241 ரன்கள் குவித்தார்.

அப்படிப்பட்ட ஒரு இன்னிங்சை விராட் கோலி அல்லது ரோகித் சர்மா விளையாட வேண்டும். முதல் இன்னிங்சில் எந்த அணி அதிகம் முன்னிலை பெறுகிறார்களோ, அவர்களை வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.பந்துவீச்சை பொறுத்தவரை சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும். பௌலர்கள் விக்கெட் எடுக்க ஷார்ட் பால்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

Story first published: Thursday, January 2, 2025, 7:50 [IST]
Other articles published on Jan 2, 2025
English summary
Ind vs aus- What India cricket team need to do Win in sydney Test சிட்னி டெஸ்டில் வெற்றி பெற இந்தியா என்ன செய்யனும்? கோலி, ரோகித், ராகுல் இதை செய்தால் போதும்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+