Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபாலோ ஆனை தவிர்த்தாலும், விலகாத கண்டம்.. போட்டியை சமன் செய்ய இந்தியா என்ன செய்யனும்?

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பாலோ ஆனை தவிர்த்தாலும் இன்னும் முழு ஆபத்து நீங்க இல்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளனர்.

மூன்றாவது டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி கடும் போராட்டத்திற்கு பிறகு பாலோ ஆனை தவிர்த்தது.

ind vs aus rohit sharma india vs australia vs

இந்த சூழலில் நான்கு நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து பாலோ
ஆனை தவிர்த்து இருக்கிறது. இன்னும் இந்திய அணி ஆஸ்திரேலிய ஸ்கோரை விட 193 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. ஐந்தாவது நாளிலும் மழை குறுக்கீடு இருக்கும் என்பதால் சில ஓவர்கள் பாதிக்கப்படலாம்.

ஆனால் குறைந்தபட்சம் 50 முதல் 60 ஓவர் வரை வீசப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணி போட்டியை சமன் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பும்ரா, ஆகாஷ் தீப் இன்னும் நின்று கொண்டிருக்கிறார்கள். முடிந்தவரை இந்த ஜோடி கூடுதல் ரன்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஏற்கனவே தங்களுடைய பணியை சிறப்பாக செய்துவிட்டார்கள் என்பதால் அவர்களிடமிருந்து இன்னும் எதிர்பார்ப்பது கொஞ்சம் பேராசை தான்.

இருந்தாலும் இந்த ஜோடி ஒரு பத்து ஓவர் நாளை பிடித்து 20 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது மிகப்பெரிய பின்னடைவை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படுத்தும். ஏனென்றால் ஹேசல் வுட் காயம் காரணமாக விலகிய நிலையில் பேட் கம்மின்ஸ்,மிட்செல் ஸ்டார்க் தான் அதிக ஓவர்களை வீசி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் பேட்டிங் செய்யும்.

ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் 20 ஓவர் களை எதிர்கொண்டு நூறு ரன்களை சேர்க்கும். இல்லையெனில் குறைந்த பட்சம் 10 ஓவராவது ஆஸ்திரேலிய பேட்டிங் செய்யும். இதனை அடுத்து மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மை என கணக்கிட்டால் 40 ஓவர்கள் எஞ்சி இருக்கும்.இந்த 40 ஓவரிலும் இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும்.

முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகள் இழந்தது போல் இரண்டாவது இன்னிங்ஸில் அதே தவறை செய்யக்கூடாது. இதை ஒரு பயிற்சியாக இணைத்து இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை நாளை 98 ஓவர்களும் நடைபெறும் என்றால் நிச்சயம் இந்தியாவுக்கு ஆபத்து நீங்கவில்லை என்பதே அர்த்தம்.

Story first published: Tuesday, December 17, 2024, 16:28 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+