For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS- மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற என்ன செய்யனும்.. இது மட்டும் நடந்தால் போதும்!

மெல்போர்ன் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி யாருடைய தயவும் இல்லாமல் தகுதி பெற வேண்டும் என்றால் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் இல்லாத வெல்ல வேண்டும். இந்த சூழலில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

ind vs aus virat kohli rohit sharma melbourne weather forecast

இந்த சூழலில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் கடுமையாக தடுமாறியது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி,கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் யாருமே எதிர்பாராத வகையில் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் ரெட்டி வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. இதில் நிதிஷ்குமார் ரெட்டி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். வாஷிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு அரை சதம் எடுத்தார். இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருக்கிறது.

இன்னும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 116 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. எனினும் இன்றைய நாள் தொடக்கத்தில் இந்திய அணி நிச்சயமாக தோல்வி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணிக்கு வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணி ஆபத்திலிருந்து நீங்கவில்லை என்றாலும் தற்போது வெற்றிக்கான கதவு லேசாக திறந்து இருக்கிறது.

சரி இனி இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். தற்போது இந்தியா 116 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. நிதீஷ்குமார் ரெட்டி, சிராஜ் ஆகியோரிடம் நாம் பெரிதாக இனி எதையும் எதிர்பார்க்க கூடாது. இதனால் 116 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்குகிறது என வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் தான் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக பந்துவீச வேண்டும். எப்படி பிரஸ்பென் டெஸ்ட் போட்டியில் இந்தியா விக்கெட்டுகளை கொத்தாக எடுத்தது, அதே போல் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை இந்தியா அடுத்தடுத்து வீழ்த்த வேண்டும். மேலும் ஆஸ்திரேலியா அணி ரன் குவிக்க ஈடுபட வாய்ப்பு தரக்கூடாது. ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்சில் 100 அல்லது 150 ரன்கள் சுருட்ட வேண்டும். அதிகபட்சம் 200 அல்லது 250 ரன்கள் சுருட்ட வேண்டும்.

இப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணி 250 லிருந்து 300 ரன்கள் வரைக்கும் சூழல் உருவாகும். இதனை அடுத்து நான்காவது நாள் மாலையில் இருந்து இந்திய அணி 100 ஓவருக்கு மேல் பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி விக்கெட்டுகள் விழாமல் பொறுப்பாக விளையாடி இந்திய அணி ரன்கள் சேர்த்தால் ஒன்று இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் போட்டியை சமனிலும் முடிக்க முடியும். முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா, கோலி ஆகியோர் தடுமாறிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அதனை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Story first published: Saturday, December 28, 2024, 17:02 [IST]
Other articles published on Dec 28, 2024
English summary
Ind vs aus- What India need to win the 4th test in melbourne மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற என்ன செய்யனும்.. இது மட்டும் நடந்தால் போதும்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+