Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி vs ரோஹித் சர்மா.. போஸ்டரில் ஹிட்மேன் நீக்கப்பட காரணம் என்ன? ஆஸ்திரேலியா நோக்கமே இதுதான்!

சிட்னி: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் போஸ்டரில் பேட் கம்மின்ஸ் மற்றும் விராட் கோலி இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற வேண்டிய இடத்தில் விராட் கோலியை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கொண்டு வந்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவ.22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன்பின் இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

ind vs aus virat kohli rohit sharma


இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருப்பதால், அவரின் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறார். இதனால் பிரசவ நேரத்தில் ரித்திகா உடன் இருக்க விரும்புவதால், ரோஹித் சர்மா தாமதமாக செல்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான போஸ்டரில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பேட் கம்மின்ஸ் மற்றும் விராட் கோலி இருவரையும் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கும் போது, எப்படி விராட் கோலியின் போஸ்டரை பயன்படுத்தலாம் என்று ஹிட்மேனின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மீடியாக்கள் இந்திய வீரர்களுக்கு இடையில் சண்டையை தொடங்கி வைப்பதே நோக்கமாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் விளையாட பயணிக்கும் போது, இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் உள்ளது என்று பொய்யான செய்திகளை பரப்பி இருக்கின்றன.

அதனை மீண்டும் செய்வதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விராட் கோலியின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஏனென்றால் 2018-19 பார்டர் கவாஸ்கர் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடாத போது, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாட வருகிறார் என்று தான் விளம்பரப்படுத்தின.

ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார். 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 1,352 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் விராட் கோலியின் போஸ்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 10, 2024, 20:26 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+