Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பாலில் திணறுவது ஏன்? விராட் கோலி பேட்டிங்கில் உள்ள டெக்னிக்கல் சிக்கல் என்ன?

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா மைதானத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடியுள்ள 28 இன்னிங்ஸில் 27 முறை அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றுள்ளார். தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பந்துகளுக்கு விராட் கோலி ஆட்டமிழப்பது ஏன், அவரின் பேட்டிங்கில் உள்ள டெக்னிக்கல் சிக்கல் என்ன என்பதை பார்க்கலாம்.

2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 82 ரன்களை விளாசி விராட் கோலி அசத்தி இருப்பார். அப்போது விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் கேப்டன் தோனி பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆர்தோடக்ஸ் ஷாட்கள் மூலமாக ஆதிக்கம் செலுத்தும் வீரராக விராட் கோலி இருக்கிறார்.

ind vs aus virat kohli rohit sharma vs

ஒருமுறை கூட ரிவர்ஸ் ஸ்வீப், பேடில் ஸ்வீப், ஸ்கூப் ஷாட் என்று வித்தியாசமான ஷாட்களை அடிக்கவில்லை. இது முழுக்க முழுக்க Old School பேட்டிங் தான். அவரின் மணிக்கட்டின் பலத்தால் பந்துகளை பலமாக அடித்து அசத்துகிறார் என்று பாராட்டி இருப்பார். அதாவது விராட் கோலியின் பலமே கவர்ஸ், ஸ்கொயர், தேர்ட் மேன் உள்ளிட்ட திசைகளில் ஷாட்களை அடிப்பது தான்.

அவர் அதிகளவில் கவர் ட்ரைவ் மற்றும் ஃபிளிக் ஷாட்கள் மூலமாக ரன்களை சேர்த்திருக்கிறார். இதற்கு அவரின் பேட்டிங் ஸ்டான்ஸ் முக்கிய காரணம். அவரின் பேக் அண்ட் அக்ராஸ் ( Back and Across ) ஸ்டான்ஸில் ஆடுபவர். அதாவது விராட் கோலி பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக அவரின் பேக் ஃபூட் (Back Foot) கொஞ்சம் பின் கொண்டு செல்லப்படும். பின் முன்கால் (Front Foot) முன்னாடி கொண்டு வந்து கூடுதல் அழுத்தம் கொடுப்பார்.

இதனால் விராட் கோலியின் எடை ஃபிரெண்ட் ஃபூட்டில் அதிகரிக்கும். இதனால் விராட் கோலி ஃபிரண்ட் ஃபூட்டில் விளையாடவே காத்திருப்பார். இதன் காரணமாகவே விராட் கோலி கவர்ஸ் மற்றும் மிட் விக்கெட் திசையில் அதிக ரன்களை அடித்திருக்கிறார். அதேபோல் ஃபிரண்ட் ஃபூட்டில் அதிக எடை கொடுப்பதால், அவர் இயல்பாக ஷாட் ஆடுவவதற்காக பந்துக்கு அருகில் சென்றுவிடுவார்.

இந்த டெக்னிக்கில் விராட் கோலியை எதிரணிகள் அதிகமாக வீழ்த்தி வந்தனர். குறிப்பாக அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு விராட் கோலி ஆட்டமிழக்க, அவரின் ஸ்டான்ஸ் முக்கிய காரணமாக அமைந்தது. இதனையறிந்த விராட் கோலி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பின்பற்றி வந்த ஸ்டான்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பின்பற்றி வருகிறார்.

அதாவது வழக்கம் போல் பேக் ஃபூட்டில் பின் கொண்டு செல்லும் போது, ஃபிரண்ட் ஃபூட்டையும் பின்னால் கொண்டு செல்கிறார். இதனால் விராட் கோலி முதுகுதண்டு வளைவது குறையும். கிட்டத்தட்ட முதுகை வளைக்காமல் பேட்டிங் ஆடுவதை போன்ற ஸ்டான்ஸ் அது. இதனால் பந்து வீசப்படுவதற்கு முன்பாக விராட் கோலி அந்த ஸ்டான்ஸ்-க்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

ஸ்டான்ஸை மாற்றினாலும் அவரின் ஷாட்களை மாற்ற முடியவில்லை. ஏனென்றால் விராட் கோலி விளையாட தொடங்கியது முதலே கவர்ஸ் மற்றும் மிட் விக்கெட் திசையில் தான் ரன்களை அடித்துள்ளார். இதனால் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை எளிதாக அடிக்கலாம் என்று முயற்சிக்கும் போது, விராட் கோலி விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

எதிரணிகள் விராட் கோலியின் ஸ்டான்ஸ் மற்றும் டெக்னிக்கல் பிரச்சனையை அறிந்தே, அவருக்கு எதிராக அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைன் திட்டத்திற்கு பவுலிங் செய்கிறார்கள். 2018 வரை விராட் கோலி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு மட்டுமே திணறி வந்தார். தற்போது ஸ்டான்ஸ் மாறியதால், 6வது ஸ்டம்ப் லைன் பந்துகளிலும் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் செல்கிறார்.

விராட் கோலி தனது பேட்டிங்கில் உள்ள டெக்னிக்கல் சிக்கலை சரி செய்தால் மட்டுமே அவரால் ரன்களை குவிக்க முடியும். அதனை விடுத்து நெட்ஸில் எவ்வளவு பயிற்சிகளை மேற்கொண்டாலும் பலன் தராது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளர் என்று யாருமே கிடையாது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த போது, பேட்டிங் பயிற்சியாளர் என்று விக்ரம் ரத்தோர் செயல்பட்டு வந்தார். ஆனால் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், இதுவரை பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. ஒரு வீரரிடம் டெக்னிக்கல் பிரச்சனை இருக்கிறது என்றால், அதனை பேட்டிங் பயிற்சியாளர் தொடர்ச்சியாக பணியாற்றி மட்டுமே சரி செய்ய முடியும்.

இலங்கை அணியின் ஜெயவர்தனே கூட சில ஆண்டுகள் தனது பேட்டிங்கில் டெக்னிக்கல் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். தனது பேட்டிங்கில் உள்ள டெக்னிக்கல் சிக்கல் குறித்து விராட் கோலியும் அறிந்தே இருக்கிறார். ஆனால் அவரின் ஷாட்கள் கவர்ஸ் திசையை பின்பற்றிய அமைந்துள்ளதால், இயல்பாக அந்த ஷாட்டிற்கு செல்வதும் சிக்கலாக அமைந்துள்ளது.

Story first published: Monday, December 30, 2024, 23:25 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+