Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் இம்முறை கோலி, ரவி சாஸ்திரி யார்? பெரிய சவால் காத்திருக்கு.. இங்கி. வீரர் எச்சரிக்கை

மும்பை : ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் முடியாத காரியம். ஆனால் இந்திய அணி இந்த நம்ப முடியாத சாதனையை தொடர்ந்து இரண்டு முறை செய்து காட்டி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும் தங்களால் முடியும் என்று நம்பி ஒட்டுமொத்த அணியையும் அபாயகரமான அணியாக மாற்றி இருந்தார்கள்.

ind vs aus virat kohli rohit sharma r ashwin

ஆனால் இம்முறை இந்திய அணி மிகவும் மோசமான ஒரு நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தொடர் தோல்வியில் சந்தித்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத ஒரு சூழல் இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ரோகித் சர்மா, கில் போன்ற ஸ்டார் வீரர்களும் காயம் காரணமாக இம்முறை விளையாடவில்லை.

அனுபவ வீரர்களான புஜாராவும் சேர்க்கப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் புதியதாக விளையாடப் போகும் வீரர்களை வைத்துக் கொண்டுதான் பயிற்சியாளர் கம்பீர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன், கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு வந்து வெற்றியை பெற்றெடுக்கிறார்கள்.

அப்போது இந்திய அணியில் பிரமாதமான பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இருந்தார். விராட் கோலி ஒரு கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதிரடியாக செயல்பட்டு களத்தில் ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களை வீழ்த்த முடியும் என்பது என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கின்றது.

அதனை ரவி சாஸ்திரியும், விராட் கோலி செய்து காட்டினார்கள். ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியில் ரவி சாஸ்திரி யார்? அவரை போல் இன்னொரு பயிற்சியாளர் வரப்போவதில்லை என்று எனக்கு தெரியும். அதே போல் அந்த தொடரில் இருந்த கோலியை போல் இந்த தொடரில் யார் செயல்பட போகிறார்கள். கோலியை போல் ரோகித் சர்மா செயல்பட முடியுமா? எனவே ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 19, 2024, 18:59 [IST]
Other articles published on Nov 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+