For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக சாதிக்கும் ரோகித், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்புவது ஏன்?

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான். தோனி பல்வேறு ஐசிசி தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்து இருக்கிறார். டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தோனி தலைமையிலான இந்திய அணி பிடித்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தோனியை தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து தோல்வியை தழுவி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார்.

இதேபோன்று தோனிக்கு பிறகு இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா தான். அது மட்டுமில்லாமல் 2023 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை இந்தியாவை ரோகித் சர்மா அழைத்துச் சென்றார்.ஆசிய கோப்பை,ஐந்து முறை ஐபிஎல் கோப்பை என ரோகித் சர்மா வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் முடி சூடா மன்னனாக இருக்கிறார்.

ind vs aus virat kohli rohit sharma melbourne vs

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவால் கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. தற்போது ரோகித் சர்மா கேப்டனாக கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்வியும் ஒரு டிராவும் பெற்று இருக்கிறார். ஆனால் மறுபுறம் விராட் கோலி வெள்ளை நீற கிரிக்கெட் பந்துகளில் கேப்டனாக பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த கேப்டனாக அவர் விளங்கி இருக்கிறார். இப்படி விராட் கோலியால் டெஸ்டில் சிறப்பாக செயல்பட முடிகிறது. ஆனால் டி20 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதேசமயம் ரோகித் சர்மாவால் ஒருநாள் டி20 போட்டியில் கேப்டனாக சாதிக்க முடிகிறது.

டெஸ்டில் அந்த அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். டி20 போட்டிகள் கண் இமைக்கும் நேரத்தில் முடிவடைந்துவிடும். டி20 போட்டியில் கேப்டன்கள் மின்னல் வேகத்தில் முடிவை எடுக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் எப்படி அடிப்பார். அவரை கட்டுப்படுத்த என்ன மாற்றத்தை செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்தடுத்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் ரன்களை கட்டுப்படுத்தினாலே போதும். இதுவே ஒரு நாள் கிரிக்கெட் கேப்டனுக்கு முடிவு எடுக்க மூச்சு விடும் அளவுக்கு நேரம் கிடைக்கும். யோசித்து முடிவு எடுக்க நேரம் கிடைக்கும். ஆனால் டி20 போட்டியில் பெரிய வெர்சனாக ஒரு நாள் கிரிக்கெட் தற்போது மாறிவிட்டது என்பதால் இந்த இரண்டு போட்டிகளுமே கேப்டனாக இருக்க விரைவில் முடிவு எடுக்க வேண்டிய திறமையை கேப்டன் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் டெஸ்ட் போட்டி என்பது அப்படி கிடையாது. இது மகாபாரதம் போல் நீண்ட நெடிய போராகும். நமக்கு முடிவெடுக்க நேரம் இருப்பது போல் எதிரணி கேப்டனுக்கும் முடிவு எடுக்க அவகாசம் இருக்கும். இதனால் நாம் ஒரு யுத்தியை பயன்படுத்த முயற்சி செய்தால் அந்த யுத்தியை உடைக்க எதிரணி கேப்டனாலும் முடியும். எனவே ஒருவருக்கு ஒருவர் மைண்ட் கேம் ஆடி போட்டியில் வெற்றி பெற வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் நாம் ஆதிக்கம் செலுத்தினால் அடுத்த கட்டம் எதிரணி ஆதிக்கம் செலுத்தும்.

இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் உண்டாகும். இதன் காரணமாக தான் டி20 ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக கேப்டன் பணியை செய்யும் வீரர்களால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு ஒரு நாள் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா முடி சூட மன்னனாக இருந்தது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதேபோல் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் டி20 கிரிக்கெட் விறுவிறுப்பாக மின்னல் வேகத்தில் நகர்கிறது என்பதால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து பாண்டிங் போன்றவர்களால் கேப்டன்ஷிப் பண்ண முடியவில்லை.

இதனால்தான் தோனி போன்றோர் டி20யில் சாதித்தனர். ஆனால் அதே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை அப்போதெல்லாம் அசைத்துக் கூட பார்க்க முடியாது. இதனால் கிரிக்கெட்டின் மரபு டெஸ்ட் என்பதால் விவேகமும் அமைதியும் இருந்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்கள் சாதிக்க முடியும். t20 க்கும் ஒரு நாள் போட்டிக்கும் கடிவாளம் போட்டுக்கொண்டு ஒரே திசையில் கேப்டன்கள் செல்லலாம்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு பக்கமும் திரும்பி பார்க்க வேண்டும். புதிய முயற்சியை எடுக்க வேண்டும். ஒரு செஸ் விளையாட்டில் வீரர் பொறுமையாக யோசித்து காய் நகர்த்துவது போல் டெஸ்டில் கேப்டன்கள் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் தான் ரோகித் சர்மா தடுமாறி வருகிறார். ரோகித் சர்மா கடிவாளம் போட்டுக்கொண்டு ஒரே மாதிரி ஸ்டைலில் பயணப்படுகிறார்.

ஆனால் விராட் கோலி இந்த விஷயத்தில் மாறுபட்டு வித்யாசமான முயற்சியை செய்கிறார். இதனால் தான் டெஸ்டில் ரோகித் சர்மா கேப்டனாக எடுக்கும் முடிவுக்கு விராட் கோலி கேப்டனாக எடுக்கும் முடிவுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் கூட இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும்போது சுற்றிலும் ஃபீல்டர்களை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நிற்க வைத்தார்.

இதற்கு காரணம் கேட்ச் அங்கெல்லாம் வந்துவிடும் என்பது அல்ல. ஒரு பவுலருக்கு எதிராக பத்து ஃபீல்டரை அருகில் நிறுத்த வைத்தால் அதுவே மனதளவில் பெரிய பாதிப்பை அவருக்கு உண்டாகும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு யுத்தியை கேப்டன் ரோகித் சர்மா செய்யவே இல்லை. ஏனென்றால் அவர் டி20 ஸ்டைலிலே யோசிக்கிறார். இதனால் தான் ரோகித் சர்மாவால் கேப்டனாக சாதிக்க முடியவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி, ரோகித் சர்மா ஒரு நாள் டி20 போட்டிக்கு சிறந்த கேப்டனாக இருந்தாலும் விராட் கோலி தான் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக தொடர வேண்டும் என்பதில் தான் தீவிரமாக இருந்தேன். விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகப் போகிறேன் என கூறியவுடன் நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் விராட் கோலியை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறினார்.

Story first published: Monday, December 30, 2024, 19:35 [IST]
Other articles published on Dec 30, 2024
English summary
Ind vs aus- Why Rohit sharma struggling in Test captaincy- anlaysis டி20, ஒருநாள் கரிக்கெட்டில் கேப்டனாக சாதிக்கும் ரோகித், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்புவது ஏன்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+