Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஆண்டுகளுக்கு முன் இதே பிரிஸ்பேன் டெஸ்டில் கேப்டன் கங்குலி செய்த சம்பவம்.. ரோகித் ஃபாலோ செய்வாரா?

பிரிஸ்பேன்: 2003- 04 ல் இந்திய கிரிக்கெட் அணி சவுரவ் கங்குலி தலைமையில்
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம்.மேற் கொண்டது.பிரிஸ்பேனில் நடைப் பெற்ற முதல் டெஸ்டில் (டிசம்பர் மாதம் ) டாஸ் வென்ற கங்குலி முதலில் அணி
பந்து வீச முடிவு செய்தார்.

எதிர் பார்த்த படி சுலபமாக ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டுக்களை எடுக்க முடியவில்லை.ஒப்பனிங் ஜோடி நன்றாகவே விளையாடினர்.முதல் விக்கெட் விழுந்த பொழுது அவர்கள் ஸ்கோர் 73. அவுட் ஆன மாத்யு ஹைட்டேன் ஸ்கோர் 37.

ind vs aus rohit sharma india vs australia gabba test vs

துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் , ரிக்கி பாண்டிங் ஜோடி அணியின் ஸ்கோரை 162 ரன்களுக்கு எடுத்து சென்றது. பாண்டிங் அவுட் (54 ரன்கள்) ஸ்கோர் அதிகரித்து லாங்கர் அவுட் ஆகும் பொழுது அந்த அணி எடுத்த ரன்கள் 268.
198 பந்துக்கள் எதிர் கொண்டு 17 பவுண்டரிகள் அடித்து சதம் எடுத்த லாங்கரின் ஸ்கோர் 121.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 323.ஜாஹீர் கான் 5 , அஜித் ஆகார்க்கர் 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.இந்திய அணி முதல் விக்கெட் (வீரேந்திர ஷேவாக் 45 ரன்கள்) 61 ரன்களுக்கு விழுந்தது. தொடர்ந்து இரண்டு விக்கெட்டுக்கள் அணி இழந்தது ( ராகுல் டிராவிட் 1, டெண்டுல்கர் 0) ஸ்கோர் 62 - 3.

அடுத்து களம் இறங்கிய கேப்டன் கங்குலி
பொறுப்போடு நின்று ஆடி தனது அருமையான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். வி.வி.எஸ் லட்சுமன் உடன் ஜோடி சேர்ந்து 143 ரன்கள் சேர்த்தார்.

லட்சுமன் 11 பவுண்டரிகளுடன் எடுத்த ரன்கள் 75.கேப்டனின் ஆட்டம் ஆடிய ( Captain's knock ) சவுரவ் கங்குலி எதிர் கொண்ட பந்துக்கள் 196.
பவுண்டரிகள் 18.சதம் எடுத்த கங்குலியின் ரன்கள் 144.
இந்திய அணியின் ஸ்கோர் 409.

அவர்கள் அணியில் ஜேசன் கில்லிஸ்பி, மாக்கில் தலா 4 விக்கெட்டுக்கள்
எடுத்தனர்.இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு முடித்துக் கொண்டது. ஸ்கோர் 284 / 3 டிக்ளர்
ஆட்ட முடிவில் இந்திய அணி ஸ்கோர் 73 / 2 டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் சவுரவ் கங்குலி ஆட்ட நாயகராக
திகழ்ந்தார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, December 16, 2024, 14:34 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+