Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஹர்சித் ராணா அதிரடி.. தடுமாறிய இந்திய அணியை காப்பாற்றிய ஸ்ரேயாஸ்.. 264 ரன்கள் குவிப்பு!

அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அரைசதம் விளாசினர். கடைசி நேரத்தில் ஹர்சித் ராணாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுத்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. ரோகித் சர்மா டாட் பால்களாக விளையாட, சுப்மன் கில் மீது அழுத்தம் அதிகரித்தது.

IND vs AUS

இதனால் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின் ரோகித் சர்மா - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்தது. இருவரும் நிதானமாக தொடங்கினாலும், கொஞ்சம் கொஞ்சமாக பவுண்டரிகளை விளாச தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா தனக்குள் இருக்கும் ஹிட்மேனை வெளியில் கொண்டு வந்தார். சில சிக்சர்களை பறக்கவிட, இந்திய அணியின் கைகள் ஓங்கியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 74 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதத்தை நெருங்கினார். 3வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஷார்ட் பாலில் சிக்ஸ் அடிக்க முயன்று ரோகித் சர்மா 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடக்க, ஜாம்பா வீசிய பந்தில் அட்டாக் செய்ய முயன்று 61 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதன்பின் வந்த வீரர்களில் அக்சர் படேல் மட்டும் சிறப்பாக விளையாட, கேஎல் ராகுல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும், நிதீஷ் குமார் ரெட்டி 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

தொடர்ந்து அக்சர் படேலும் 44 ரன்களி ஆட்டமிழக்க, இந்திய அணி 45 ஓவர்களில் 226 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அப்போது அர்ஷ்தீப் சிங் - ஹர்சித் ராணா இருவரும் இணைந்து அதிரடியாக ரனகளை சேர்த்தனர். ஹர்சித் ராணா பவுண்டரிகளாக விளாசி தள்ள, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளையும், மிட்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Story first published: Thursday, October 23, 2025, 13:06 [IST]
Other articles published on Oct 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+