For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன காரியம் பண்ணிட்டீங்க ஜெய்ஸ்வால்.. 3 முறை செய்த தவறு.. கொல காண்டான ரோகித்! மீண்ட ஆஸி

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக தீவிரமாக போராடி வந்த நிலையில் ஜெய்ஸ்வால் செய்த தவறு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே ஒவ்வொரு கேட்ச்சும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும்.

அதேபோல் ஒரு கேட்சை மிஸ் செய்தாலும் அது பெரிய பாதகத்தை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் ஆஸ்திரேலியாவில் 474 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணி 369 ரன்களில் ஆட்டம் இழந்தது.

ind vs aus yashasvi jaiswal rohit sharma akash deep

இதன் மூலம் 105 ரன்கள் முன்னிலை பெற்று நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. ஆனால் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் அபார பந்துவீச்சால், ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து ஏழாவது விக்கெட்டுக்கு கம்மின்ஸ், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வந்தனர். அப்போது மார்னஸ் லாபஸ்சேன் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆகாஷ் தீப் வீசிய பந்தை அடித்தார். அது Gully போஷிசனில் நின்று கொண்டிருந்த ஜெய்ஸ்வாலிடம் வந்தது. இந்த அல்வா போன்ற கேட்சை ஜெய்ஸ்வால் மிஸ் செய்து விட்டார்.

இதனால் ரோகித் சர்மா கடுப்பாகி கடுமையாக திட்டினார். பந்து வீசிய ஆகாஷ் தீப்பும் மோசமான ஒரு வார்த்தையை சொல்லி திட்டினார். இதன் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட லாபஸ்சேன், தற்போது அரை சதம் கடந்து தேனீர் இடைவெளியின் போது 65 ரன்கள் எடுத்தார்.

இதே போன்று கம்மின்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஜடேஜா ஓவரின் அவர் ஒரு கேட்சை கொடுத்தார். அதையும் short leg-ல் நின்று கொண்டிருந்த ஜெயஸ்வால் தவறவிட்டார். அதேபோன்று இன்றைய நாள் தொடங்கும் போது உஸ்மான் கவஜாவிற்கும் ஒரு கேட்சை ஜெயிஸ்வால் தவறவிட்டார். இதனால் ஒரே நாளில் மூன்று முறை கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

Story first published: Sunday, December 29, 2024, 10:43 [IST]
Other articles published on Dec 29, 2024
English summary
Ind vs aus- Yashasvi Jaiswal blunder in fielding gives australia to make a come back என்ன காரியம் பண்ணிட்டீங்க ஜெய்ஸ்வால்.. 3 முறை செய்த தவறு.. கொல காண்டான ரோகித்! மீண்ட ஆஸி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+