Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனைவரும் என் மாணவன் மீது சந்தேகப்பட்டார்கள்! இன்று அவன் தான் டாப்!ஜெய்ஸ்வால் பயிற்சியாளர் நெகிழ்ச்சி

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட் ஆகியோர் தான் ரன்கள் குவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் என்றால் அது நான் தான் என்ற பெயரை வாங்கி இருக்கிறார் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வால் சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி இரட்டை சதங்களை அடித்து இருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதுவும் அந்நாட்டு மண்ணில் சென்று ஜெய்ஸ்வால் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

ind vs aus yashasvi jaiswal rohit sharma vs


ஆனால் தன்னுடைய பேட்டிங் மூலம் ஜெயஸ்வால் அதை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார். பெர்த் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸுமே 80 ரன்கள் கடந்து ஆட்டம் இழந்தார். இது குறித்து மைக்கேல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் ஆன ஜுவாலா சிங், ஆஸ்திரேலியாவில் இரண்டு இன்னிங்ஸ்களுமே சதம் அடித்தால் அது மிகப்பெரிய சாதனையாகும்.

ஆனால் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக அதை செய்ய முடியாமல் போய்விட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது என்பது எப்போதாவது தான் நடக்கும். மேலும் மூன்றாவது நடுவர் தவறான முடிவு அளித்ததும் ஜெய்ஸ்வாலுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை கொடுக்காமல் போகிவிட்டது. கள நடுவர் அவுட் வழங்காமல் மூன்றாம் நடுவரிடம் டிஆர்எஸ் என்றால் தொழில்நுட்பம் உறுதியாக அவுட் என்று தெரிவித்தால் மட்டுமே மூன்றாவது நடுவர் அவுட் வழங்க வேண்டும்.

சந்தேகத்துக்கு உரிய வகையில் இருந்தால் அது பேட்ஸ்மேனனுக்கு சாதகமான முடிவை தான் மூன்றாம் நடுவர்கள் அளிப்பார்கள். இதுதான் கிரிக்கெட் நீதி. ஆனால் மூன்றாவது நடுவர் சிண்கோ, ஹாட்ஸ்பாட் போன்றவற்றில் எதுவும் தெரியாத நிலையில் அதற்கு அவுட் வழங்கி விட்டார்.பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் ஆன பிறகு தற்போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸுமே ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடிருப்பது அவருடைய தன்னம்பிக்கையை நிச்சயம் அதிகரிக்கும்.

என்னுடைய மாணவரான ஜெயஸ்வாலை ஆஸ்திரேலிய மண்ணில் அவர் ரன் குவிப்பாரா என்று சந்தேகத்துடன் பார்த்தார்கள். தற்போது ஜெய்ஸ்வால் மட்டும் தான் அபாரமாக விளையாடி பதிலடி கொடுத்திருக்கிறார். தன் மீது கேள்வி எழுப்பியவர்கள் முன் தன்னுடைய திறமையை ஜெயிஷ்வால் நிரூபித்து இருக்கிறார்.

நான் எப்போதுமே ஜெயஸ்வாலிடம் கூறுவது ஒரே ஒரு விஷயம் தான். உனக்கு வெற்றி வேண்டுமென்றால் திறமை, தன்னம்பிக்கை, உடல் தகுதி, புத்திசாலித்தனம். இது நான்கும் வேண்டும் என்று சொல்வேன்.இந்த நான்குமே ஜெயஸ்வாலிடம் இருக்கிறது. இதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் என்று ஜூவாலா சிங் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 31, 2024, 15:55 [IST]
Other articles published on Dec 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+