மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி வந்து ரன்களை சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக கடுமையாக உழைத்த நிலையில் ஜெய்ஸ்வால் தனி ஆளாக நின்று சூப்பர் ஹீரோ போல் இந்திய அணியை காப்பாற்ற முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில் எப்போதெல்லாம் எதிரணி வீரர்கள் அபாரமாக விளையாடுகிறார்களோ, அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய அணி அவர்களை ஸ்லெஜிங் செய்து கவனத்தை சிதறடித்து விக்கெட்டை எடுக்க முயற்சி செய்யும்.

இந்த கைவந்த கலையை ஆஸ்திரேலிய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு எதிராக செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சமன் செய்ய போராடிய நிலையில் ஜெய்ஸ்வாலும் ரிஷப் பண்ட், களத்தில் நின்று நான்காவது விக்கெட்டுக்கு ரன்களை சேர்த்து வந்தனர்.
அப்போது ஷார்ட் லெக்கில் நின்ற 19 வயது வீரரான ஜெய்ஸ்வாலை தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டே இருந்தார். ஜெய்ஸ்வாலின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அவர் பேசிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத ஜெய்ஸ்வால் உனக்கு என்ன பிரச்சனை! உன் வேலையை மட்டும் பார்! நீ இப்படி பேசிக் கொண்டே இருந்தால் நான் எப்படி பேட்டிங் செய்ய முடியும் என்று கருப்பாகி திட்டினார்.
நடுவரிடமும் அவர் முறையிட்டார். ஆனால் ஜெய்ஸ்வாலின் கோபம் அடங்கியவாறு இல்லை ஜெய்ஸ்வால் எச்சரிக்கை விடுத்த பிறகும் கோன்ஸ்டாஸ் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். இதனை அடுத்து நாதன் லயன் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் வேண்டுமென்றே கோன்ஸ்டாஸ் மேல் படும்படி பலார் என்று ஒரு ஷாட் வைத்தார்.
அந்த பந்து ஷாம்கோன்ஸ்டாசை பதம் பார்த்தது. ஒரு நொடியில் உயிர் பயத்தை ஜெய்ஸ்வால் கோண்ஸ்டாஸ்க்கு காட்டினார். இந்த ஷாட்டை கோன்ஸ்டாஸ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் கோன்ஸ்டாஸ் தம்ப்ஸ் அப் கொடுத்துவிட்டு அதன் பிறகு ஜெய்ஸ்வால் வம்புக்கு செல்லவில்லை. தம்மை சீண்டிய வீரரை அவர் மீது பந்து படும்படி ஷாட் அடித்து தன்னுடைய கோபத்தை ஜெய்ஸ்வால் தீர்த்துக் கொண்டார்.