For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உண்மையான கெத்துனா அது ரோகித் தான்.. 9 விக்கெட் விழுந்த உடனே இந்திய அணி டிக்ளேர்.. திட்டமே இது தான்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்திருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா தைரியமாக டிக்ளேர் செய்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமென்றால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் வங்கதேச அணி முதல் நாளில் பேட்டிங் செய்த போது வெறும் 35 ஓவர்கள் மட்டும்தான் வீசப்பட்டது.இதில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது நான் ஆட்டமும், மூன்றாவது நாள் ஆட்டமும், முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி களம் இறங்கியது. இதை அடுத்து இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வங்கதேச அணியின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினர்.

ind vs ban kanpur test cricket rohit sharma virat kohli

இதன் மூலம் வங்கதேச அணி 233 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா மூன்று விக்கெட்டுகளும், சிராஜ் அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தார். இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது.

இதில் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல் விளையாடினர். முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி 50 ரன்கள் கடந்தது. ரோகித் சர்மா தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு விளாசினார். ரோகித் 11 பந்துகளில் 23 ரன்களும், கில் 36 பந்துகளின் 39 ரன்களும், ரிஷப் பண்ட் ஒன்பது ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். விராட் கோலி 47 ரன்களில் பெவிலியன் திரும்ப கே எல் ராகுல் நடுவரிசையில் அபாரமாக விளையாடினார். 43 பந்துகளை எதிர்கொண்டு அவர் 68 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். பெருகும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா அஸ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதே போன்று ஆகாஷ் தீப் 5 பந்துகளில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்து 12 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இந்த இடத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்த போது ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார் .பொதுவாக முதல் இன்னிங்சில் பெரிய இலக்கை அடிக்க வேண்டும் என்பதற்காக 10 விக்கெட்டுகளும் விழ வேண்டும் என கேப்டனகள் காத்திருப்பார்கள்.

ஆனால் ரோகித் சர்மா ஒன்பது விக்கெட்டுகள் விழுந்த உடனே டிக்ளேர் செய்ததற்கு ஒரு பின்னணி இருக்கிறது. இதன் மூலம் வங்கதேச அணியை பேட்டிங் செய்ய வைத்துவிட்டு அவர்களுடைய 10 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்த முடியும். அப்போது வங்கதேச அணி 60 அல்லது 100 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்தால் கூட அதனை இரண்டாவது இன்னிங்சில் அதிவேகமாக சேஸ் செய்ய முடியும் என்பதே ரோகித் சர்மாவின் திட்டமாக இருக்கிறது.

Story first published: Monday, September 30, 2024, 17:18 [IST]
Other articles published on Sep 30, 2024
English summary
Ind vs Ban 2nd test - Rohit sharma declaration gives surprise to fans and reason behind it உண்மையான கெத்துனா அது ரோகித் தான்.. 9 விக்கெட் விழுந்த உடனே இந்திய அணி டிக்ளேர்.. திட்டமே இது தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+