For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க வந்து யாருகிட்ட.. கண்மூடி திறப்பதற்குள் வங்கதேச டாப் ஆர்டர் காலி.. வேட்டையாடிய 3 பவுலர்ஸ்!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததற்கு பதிலடியாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையாடி வருகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 339 ரன்கள் குவித்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்த சூழலில், கூடுதலாக 37 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

ind vs ban jasprit bumrah akash deep

இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் சேர்த்தனர். வங்கதேசம் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் வங்கதேசம் அணியின் ஷாத்மன் இஸ்லாம் - ஜாகீர் ஹசன் கூட்டணி பேட்டிங்கை தொடங்கியது.

இந்திய அணியின் பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களில் போல்டாகி வெளியேற, தொடர்ந்து சிராஜ் அடுத்தடுத்து அட்டாக் செய்தார். 4வது ஓவரின் 5வது பந்தில் சிராஜ் வீசிய பந்து ஜாகீர் ஹசனின் பேடில் அடித்து சென்றது. அப்போது சிராஜ் நடுவரிடம் ஆக்ரோஷமாக அப்பீல் செய்ய, மறுபக்கம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுக்க வேண்டாம் என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கூறினார்.

ஆனால் ரீபிளேவில் ஜாகீர் ஹசன் அவுட் என்று தெரிய வந்தது. சரியாக பந்து லெக் ஸ்டம்பை தூக்கி சென்றது காட்டப்பட்டது. இதனால் இந்திய அணி மற்றொரு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது. பின்னர் 2வது ஸ்பெல்லை வீச ஆகாஷ் தீப் அழைக்கப்பட்டார். அவர் வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் ஜாகீர் ஹசனின் மிடில் ஸ்டம்ப் தூக்கியெறியப்பட்டது. இதனால் ஜாகீர் ஹசன் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த மோமினுல் அடுத்த பந்திலேயே மீண்டும் போல்டாகி வெளியேறினார். இதனால் வங்கதேசம் அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பின் சிராஜ் - பும்ரா கூட்டணி அட்டாக்கை தொடங்கியது. அப்போது சிராஜ் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் பும்ரா வீசிய அடுத்த ஓவரிலேயே அனுபவ வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களில் வெளியேற்றப்பட்டார். இதனால் முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களில் நடையை கட்ட, வங்கதேசம் அணி 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதற்கு பதிலடியாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையாடி பதிலடி கொடுத்து வருவதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 20, 2024, 13:09 [IST]
Other articles published on Sep 20, 2024
English summary
IND vs BAN: Bangladesh batsmens struggling for 40 runs of 5 wickets against Indian pacers Bumrah, Akash Deep and Siraj
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+