Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டபுள் செஞ்சுரி அடித்து விட்டு “வாட்டர் பாய்”வேலை பார்க்கும் இளம் வீரர்.. ரசிகர்கள் விளாசல்!

நாக்பூர் : வங்கதேச தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றாலும், இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை.

ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோர் சரியாக ஆடாத நிலையில், அவர்களை நீக்கி விட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டபுள் செஞ்சுரி அடித்தார்

டபுள் செஞ்சுரி அடித்தார்

சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். அடுத்து இந்தியா ஏ அணி, விஜய் ஹசாரே தொடரில் ரன் குவித்தார். குறிப்பாக, விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் அடித்து சாதனை செய்தார் சாம்சன்.

அணியில் இடம்

அணியில் இடம்

இதையடுத்து இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் உத்தேச அணியில் இடம் பெற்றார். தொடருக்கு முன் ஒரு போட்டியிலாவது இவருக்கு களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

களமிறங்க வாய்ப்பு இல்லை

களமிறங்க வாய்ப்பு இல்லை

முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மூன்றாவது போட்டியிலும் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இந்திய அணி இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்றதால், அதே கூட்டணி மீண்டும் களமிறங்கும்.

பேட்ஸ்மேன் மட்டுமே

பேட்ஸ்மேன் மட்டுமே

சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்றாலும், அவர் அணியில் பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் மட்டுமே சேர்க்கப்பட்டார். அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக நீண்ட காலம் வாய்ப்பு பெறுவார் என தேர்வு குழு தெளிவாக அறிவித்து விட்டது.

ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் சொதப்பல்

ஆனால், ரிஷப் பண்ட் பேட்டிங் சரியில்லை என்ற புகார் நீண்ட காலமாக உள்ளது. அதே காரணத்தால் அவர் டெஸ்ட் அணியில் தன் வாய்ப்பை இழந்தார். எனினும், டி20 அணியில் அவருக்கு நீண்ட வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது தேர்வுக் குழு.

விக்கெட் கீப்பிங் தவறுகள்

விக்கெட் கீப்பிங் தவறுகள்

இந்த நிலையில், வங்கதேச டி20 தொடரில் கீப்பிங்கில் அடிப்படை தவறுகள் செய்த பண்ட் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

ஆதரவு அதிகம்

ஆதரவு அதிகம்

பண்ட்டை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனுக்கு கடைசி டி20யில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். பிசிசிஐ தலைவர் கங்குலி முதல் பல முன்னாள் வீரர்கள் அணியின் கேப்டன் என பலரும் பண்ட்டுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதில் உறுதியாக உள்ளனர். அதனால் சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை.

ராகுலுக்கு பதில்…

ராகுலுக்கு பதில்…

கேஎல் ராகுல் சராசரியாகவே பேட்டிங் செய்து வருகிறார். அவருக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

ரசிகர்கள் விமர்சனம்

இந்த நிலையில் ரசிகர்கள் சரியாக ஆடாத ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு, நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை அவருக்கு வாட்டர் பாயாக வேலை பார்க்க வைப்பதை விமர்சித்து உள்ளனர்.

இரண்டு வீரர்களை நீக்குங்க

சரியாக ஆடாத ராகுல், பண்ட்டை நீக்கி விட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் பலர் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Sunday, November 10, 2019, 16:02 [IST]
Other articles published on Nov 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+