For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN: விராட் கோலி vs ரோஹித் சர்மா.. வங்கதேசத்திற்கு எதிராக கெத்து காட்டியது யார்? முழு விவரம்!

சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் பேட்டிங் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டிருப்பதால், ரோஹித் சர்மாவின் மீதே ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் முதல் ஜூனியர் வீரர்களான யாஷ் தயாள், துருவ் ஜுரெல் உள்ளிட்டோர் வரை அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வங்கதேசம் அணியின் வீரர்களும் சென்னை வந்திறங்கியுள்ளனர்.

ind vs ban rohit sharma virat kohli

பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்திய மண்ணில் கால்பதித்துள்ள வங்கதேசம் அணி வீரர்கள், இம்முறை இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பெறும் முனைப்புடன் பயிற்சியை தொடங்கியுள்ளனர். முன்பை விடவும் சிறந்த வீரர்களுடன் களமிறங்கியுள்ள வங்கதேசம், இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்திய அணிக்கு ஹோம் சீசன் தொடங்கவுள்ளதால், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான இந்திய அணியின் இரு நட்சத்திர வீரர்களும் எவ்வளவு ரன்கள் சேர்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ரோஹித் சர்மாவை பொறுத்தவரை வங்கதேசம் அணிக்கு எதிரான இதுவரை வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

அந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை ரோஹித் சர்மா சேர்க்கவில்லை. மொத்தமாக 33 ரன்களை தான் சேர்த்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் அணிக்கு எதிரான 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 3 சதங்கள் உட்பட 786 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடி 477 ரன்களை விளாசி இருக்கிறார்.

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இருப்பதால், ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் வங்கதேசம் அணிக்கு எதிரான பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேபோல் விராட் கோலியை பொறுத்தவரை வங்கதேசம் அணிக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 437 ரன்களை விளாசி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 5 சதங்கள், 3 அரைசதங்கள் உட்பட 910 ரன்களை குவித்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 230 ரன்களை குவித்துள்ளார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சேப்பாக்கம் மற்றும் கான்பூர் மைதானங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், விராட் கோலி எப்படி சமாளிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Sunday, September 15, 2024, 22:56 [IST]
Other articles published on Sep 15, 2024
English summary
IND vs BAN: Comparing Virat Kohli and Rohit Sharma performance against Bangladesh in the Test, ODI and T20 Cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+