Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - சென்னை டெஸ்டில் இந்த 4 வீரர்களும் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்கள்- பயிற்சியாளர் திலீப்

சென்னை : இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங்கில் ஈடுபட்டதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் பாராட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

அப்படி 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்றால் ஃபீல்டிங்கில் வீரர்கள் கில்லி போல் செயல்பட வேண்டும். தங்களிடம் வரும் கேட்சை பாய்ந்து பிடித்து அசத்தினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கிட்டும். குறிப்பாக ஸ்லீப்பிங் நிற்கும் வீரர்கள் 100% கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ind vs ban ashwin india vs bangladesh cricket rohit sharma virat kohli

இந்த நிலையில் சென்னை டெஸ்ட் போட்டியில் நான்கு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் திலிப் பாராட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சென்னை டெஸ்டில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது.

ஆனால் ஜெய்ஸ்வால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கல்லி பகுதியில் சென்று ஒரு அபாரமான கேட்சை பிடித்தார். அது மட்டுமில்லாமல் ஷார்ட் லெக்கில் நின்றும் ஒரு கேட்சை பிடித்தார். அது என்னுடைய கவனத்தை ஈர்த்தது. இதே போன்று கே எல் ராகுல் மிட் ஆன் பகுதியில் நின்று அபாரமாக பாய்ந்து ஒரு கேட்ச் பிடித்தார்.சென்னை போன்ற வெப்ப சூழல் உள்ள பகுதியில் இப்படி அபாரமாக செயல்படுவது என்பது முடியாத காரியம்.

இதேபோன்று முஹம்மது சிராஜும் ஒரு டைவ் அடித்து பில்டிங் செய்தார். ஒரு வேகப்பந்துவீச்சாளர் இவ்வாறு பில்டிங் செயல்படுவது பாராட்டுக்குரியது. இதேபோன்று விராட் கோலி குறித்து நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர் களத்தில் விளையாடும் போதும் போட்டிக்கு முன்பு பயிற்சி செய்யும் போதும் ஒரே மாதிரி தான் செயல்படுவார்.அதில் உங்களால் எந்த ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியாது. ஆட்டத்தில் அவர் செயல்பட்ட விதம் பாராட்டு கூறியது என்று திலீப் கூறியுள்ளார்.

முன்னதாக சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் திலிப்பைப் பாராட்டி பேசினார்.பில்டிங்கில் தமக்கு இதுதான் பணி என்பதை கூறி அதற்காக ஸ்பெஷல் பயிற்சியை தமக்கு அளித்ததாக அஸ்வின் பாராட்டியுள்ளார். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த போதும் திலீப் தான் பில்டிங் பயிற்சியாளாக இருந்தார். தற்போது பலரும் மாறிய நிலையில் கௌதம் கம்பீர் தலைமையிலும் தொடர்ந்து திலிப் பயிற்சியாளராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 24, 2024, 12:24 [IST]
Other articles published on Sep 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+