Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில் தேவ் சாதனை க்ளோஸ்.. புதிய வரலாறு படைத்த பும்ரா.. இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை!

சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக 70 இன்னிங்ஸ்கள் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அஸ்வினின் அபார சதத்தால் 376 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ind vs ban ravichandran ashwin jasprit bumrah

இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரிட் பும்ரா பெற்றார். அதுமட்டுமல்லாமல் பும்ரா மற்றொரு முக்கியமான சாதனையையும் முறியடித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 70 இன்னிங்ஸ்களுக்கு பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரரான கபில் 70 இன்னிங்ஸ்களில் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனை ஜஸ்பிரிட் பும்ரா முறியடித்துள்ளார். 70 இன்னிங்ஸ்கள் முடிவில் 163 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 3வது இடத்தில் 147 விக்கெட்டுகளுடன் ஜவஹல் ஸ்ரீநாத் இருக்கிறார்.

தொடர்ந்து 130 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி 4வது இடத்திலும், 127 விக்கெட்டுகளுடன் இஷாந்த் சர்மா 5வது இடத்திலும் உள்ளனர். கபில் தேவ் சாதனையை நட்சத்திர வீரர் பும்ரா முறியடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் 82 நாட்களுக்கு ஓய்வையடுத்து பும்ரா நேரடியாக வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

இதன்பின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியதோடு, அசத்தலாக விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் பும்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா தொடருக்கு பும்ரா தயாராக இருப்பதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் மைதானம் வழக்கத்திற்காக மாறாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் உதவியாக உள்ளது.

இதன் மூலமாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியை தயார் செய்ய பிட்சை மாற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, September 21, 2024, 11:03 [IST]
Other articles published on Sep 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+