Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தி ரியல் கோட்.. 400 விக்கெட்டுகள்.. சர்வதேச கிரிக்கெட்டில் மெகா சாதனை படைத்த ஜஸ்பிரிட் பும்ரா!

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் சேர்த்து பும்ரா 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி விளையாடிய எந்த போட்டிக்கும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. நீண்ட நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜஸ்பிரிட் பும்ரா 82 நாட்களுக்கு நேரடியாக வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார்.

ind vs ban ravichandran ashwin jasprit bumrah

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 376 ரன்களை குவித்தது. இதன்பின் இந்திய அணி சார்பாக பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஷாத்மன் இஸ்லாமை 2 ரன்களில் வீழ்த்திய பும்ரா, பின்னர் அனுபவ வீரரான முஷ்ஃபிகுர் ரஹீமை 8 ரன்களில் வீழ்த்தி 2வது விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து தேநீர் இடைவேளைக்கு முன் ஒரு ஓவரை வீச பும்ரா அழைக்கப்பட்டார்.

டெய்லண்டரான ஹசன் மஹ்முத் பேட்டிங் செய்தார். பும்ரா வீசிய பந்து ஹசன் மஹ்முத் பேட்டில் அடித்து நேராக 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலியின் கைகளுக்கு சென்றது. இதன் மூலமாக பும்ரா இந்தப் போட்டியில் 3வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து பும்ரா 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 162 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 89 விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது வேகப்பந்துவீச்சாளர்ன் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இவருக்கு முன்பாக 687 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் முதலிடத்திலும், 597 விக்கெட்டுகளுடன் ஜாகீர் கான் 2வது இடத்திலும், 551 விக்கெட்டுகளுடன் ஜவஹல் ஸ்ரீநாத் 3வது இடத்திலும், 448 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி 4வது இடத்திலும், 434 விக்கெட்டுகளுடன் இஷாந்த் சர்மா 5வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு பின் பும்ரா 6வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் குறைந்த இன்னிங்ஸ்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் 216 இன்னிங்ஸ்களில் அஸ்வின் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், 220 இன்னிங்ஸ்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில் தேவ் 2வது இடத்திலும், 224 இன்னிங்ஸ்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி 3வது இடத்திலும், 226 இன்னிங்ஸ்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளே 4வது இடத்திலும், 227 இன்னிங்ஸ்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா 5வது இடத்திலும் உள்ளார். இதனால் பலரும் பும்ராவை ரியல் கோட் என்று சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Friday, September 20, 2024, 14:57 [IST]
Other articles published on Sep 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+