Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மன்னிக்கவே முடியாது! 7 பந்தில் 7 ஃபோர் கொடுத்த இந்திய பவுலர்.. திட்டித் தீர்த்த ரசிகர்கள்!

Recommended Video

IND vs BAN : Khaleel Ahmed conceded 7 ball 7 fours and fans slam him

ராஜ்கோட் : இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. எனினும், கலீல் அஹ்மது மோசமான பந்துவீச்சால் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஓய்வு மற்றும் காயம் காரணமாக அணியில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இளம் பந்துவீச்சாளர்கள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். கலீல் அஹ்மது அப்படித் தான் அணியில் வாய்ப்பு பெற்றார்.

மூன்று தொடர்கள்

மூன்று தொடர்கள்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் மற்றும் வங்கதேச டி20 தொடர் என, மூன்று தொடர்களில் வாய்ப்பு பெற்றார் கலீல் அஹ்மது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

முதல் டி20 சொதப்பல்

முதல் டி20 சொதப்பல்

எனினும், அவர் அதிக ரன்களை வாரி வழங்குகிறார் என்ற புகார் இருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரன்களை அதிகமாக கொடுத்த கலீல், 19வது ஓவரில் கடைசி நான்கு பந்துகளில் ஃபோர் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். வங்கதேசம் அந்தப் போட்டியில் எளிதாக சேஸிங் செய்து வென்றது.

இரண்டாவது டி20 துவக்கம்

இரண்டாவது டி20 துவக்கம்

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் கலீல் அஹ்மது-வின் முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகள் ஃபோர் சென்றன. தொடர்ந்து ஏழு பந்துகளில் ஏழு ஃபோர் கொடுத்து அதிர்ச்சி அளித்தார் கலீல் அஹ்மது.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

இந்திய அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியும் கலீல் அஹ்மது மட்டுமே படுமோசமாக வீசி இருந்தார். 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து ரன்களை வாரி வழங்கி இருந்தார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இந்த நிலையில், இந்திய ரசிகர்கள் ரன்களை வாரி வழங்கும் கலீல் அஹ்மதுவை கடுமையாக கலாய்த்து ட்வீட் போட்டு இருந்தனர். அவர் ஏழு பந்தில் ஏழு ஃபோர் கொடுத்ததை அடுத்து அவரை வைத்து மீம்ஸ் மற்றும் கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். அவற்றில் சில -

பும்ரா சிலை

இந்தியர்கள் பும்ராவின் சிலையை வைத்து தினமும் மூன்று முறை பூஜை செய்ய வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறார் கலீல் எனக் கூறி பும்ராவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை பற்றி கூறி இருக்கிறார் இந்த ரசிகர்.

சூர்யவம்சம்

கலீல் அஹ்மது பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை சூர்யவம்சம் சரத்குமார் - தேவயாணியுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார் ஒருவர். அந்தப் படத்தில் சரத்குமார் மக்களுக்கு குடத்தை பரிசாக கொடுக்கும் காட்சியை பதிவிட்டு, இப்படி தான் இருக்கிறது கலீல் பவுலிங் என கூறி இருக்கிறார்.

கேப்டனுக்கு திட்டு

முதல் போட்டியில் கலீல் அஹ்மது பந்துவீச்சை பார்த்துவிட்டு ரோஹித் சர்மாவை தவிர வேறு எந்த கேப்டனும் அவரை ஆதரித்து இருக்க மாட்டார்கள் என கேப்டனையும் சேர்த்து விளாசி இருக்கிறார் இவர்.

டாட் பால் கொண்டாட்டம்

கலீல் அஹ்மது டாட் பால் வீசும் போது கைதட்டி கொண்டாடுகிறாராம் இந்த ரசிகர்.

செயல்பாடு

கலீல் அஹ்மது செயல்பாடு எப்படி இருக்கிறது? என ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த கொடுமையை நீங்களே பாருங்கள்!

Story first published: Friday, November 8, 2019, 19:10 [IST]
Other articles published on Nov 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+