Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.. ஆசைப்பட்டு ஆப்பு வைத்துக் கொண்ட வங்கதேச வீரர்!

Recommended Video

Kohli Rohit fielding changes lead to wicket |திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.

இந்தூர் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா - கேப்டன் கோலி இணைந்து திட்டம் போட்டு அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த காரணமாக அமைந்தனர்.

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கியது.

அதே போல, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் பேட்டிங் தேர்வு செய்தார். இந்தியா முதலில் பந்து வீசியது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

போட்டி நடைபெறும் இந்தூர் ஆடுகளம் முதல் நாளின் சில மணி நேரம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது. அதன் பின் பேட்டிங் செய்ய எளிதாக மாறி விடும்.

விரைவில் விக்கெட்

விரைவில் விக்கெட்

அதனால், இந்தியா முதல் சில ஓவர்களில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தோடு களம் இறங்கியது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் முதல் சில ஓவர்களை வீசினர்.

ரோஹித் திட்டம்

ரோஹித் திட்டம்

இரண்டாவது ஓவரை உமேஷ் யாதவ் வீசிய போது ரோஹித் சர்மா, கேப்டன் கோலியிடம் பேசினார். உடனடியாக ஸ்கொயர் லெக் திசையில் இருந்த மயங்க் அகர்வால், ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் நிறுத்தப்பட்டார்.

பீல்டிங் மாற்றம்

பீல்டிங் மாற்றம்

வங்கதேச பேட்ஸ்மேன் இம்ருல் கயஸ் லெக் திசையில் பந்தை அடிக்க திணறினார். அதன் பின் இரு ஓவர்கள் கழித்து கோலி, ஸ்லிப் திசையில் இருந்த ரோஹித் சர்மாவை ஷார்ட் மிட் விக்கெட் திசையில் பீல்டிங் நிறுத்தினார்.

உமேஷ் பந்துவீச்சு

உமேஷ் பந்துவீச்சு

உமேஷ் யாதவ், ரோஹித் மற்றும் கோலியின் பீல்டிங் மாற்றங்களுக்கு ஏற்ப பந்து வீசி வந்தார். இம்ருல் பீல்டர் இல்லாத திசையில் பந்தை அடிக்க முற்பட்டு வந்தார். உமேஷ் யாதவ்வின் மூன்றாவது ஓவரில் ரோஹித், மீண்டும் ஸ்லிப் திசைக்கே சென்றார்.

ஆசைப்பட்ட இம்ருல்

ஆசைப்பட்ட இம்ருல்

அதனால், மிட்விக்கெட் திசையில் பீல்டர் இல்லாத நிலை ஏற்பட்டது. இம்ருல் அதை பயன்படுத்தி டிரைவ் அடிக்க ஆசைப்பட்டார். ஆனால், உமேஷ் யாதவ் பந்தை ஆஃப் - சைடு ஸ்விங் ஆகிச் செல்லுமாறு வீசினார்.

எளிதான கேட்ச்

எளிதான கேட்ச்

திட்டமிட்டது போலவே பந்து இம்ருல் பேட்டில் எட்ஜ் ஆகி கல்லியில் நின்று இருந்த ரஹானேவிடம் கேட்ச் சென்றது. ரஹானே அந்த எளிதான கேட்ச்சை பிடிக்க இந்தியா ஆறாவது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்தியது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

அதன் பின் தொடர்ந்து விக்கெட் வீழ்த்திய இந்திய அணி 37.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளது. வங்கதேசம் டாஸ் வென்றாலும், பேட்டிங்கில் திணறி வருகிறது.

கேட்ச் நழுவல்

கேட்ச் நழுவல்

முஷ்பிகுர் ரஹீம் கொடுத்த இரண்டு கேட்ச்களை கோலி மற்றும் ரஹானே தவறவிட்டனர். அது மட்டுமே இந்திய அணியின் மோசமான செயல்பாடாக அமைந்தது.

Story first published: Thursday, November 14, 2019, 14:34 [IST]
Other articles published on Nov 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+