Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: முடிச்சு விட்டீங்க போங்க.. முகமது ஷமி குணமடைய 2 மாதங்களாகும்.. சோகத்தில் ரோஹித் சர்மா!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் காயம் முழுமையாக குணமடையாததால், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா தொடரிலாவது கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய அணிக்கு ஹோம் சீசன் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து வீரர்களுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. 5 நாட்கள் பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப தயாராகிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ind vs ban mohammad shami rohit sharma


இந்திய அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 4 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரரான முகமது ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அவர் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று பார்க்கப்படுகிறது.

இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 2வது வாரத்தில் தொடங்கவுள்ளது. அதற்குள் முகமது ஷமி தயாராகுவார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் முகமது ஷமி முழு ஃபிட்னஸை எட்ட இன்னும் சில காலம் பிடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது முகமது ஷமி என்சிஏவில் இருந்து தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அதற்கேற்ப சில உடற்பயிற்சிகளை என்சிஏ நிர்வாகிகள் அவருக்கு கொடுத்து வருகின்றனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி பங்கேற்க வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது.

ஆனாலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று ஷமி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் பிசிசிஐ அவரது விஷயத்தில் எந்தவித அவசரம் காட்ட வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறது. இதனால் அக்டோபர் மாதம் ரஞ்சி டிராபி தொடரின் முதல் கட்ட போட்டிகள் தொடங்கவுள்ளது. இதன் கடைசி போட்டி நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது.

அதில் முகமது ஷமியை களமிறக்கிவிட்டு, அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி பேட்டிங் செய்த போது தான், அவரின் கால்களில் காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயம் முழுமையாக குணமடைந்து வருகிறது.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி புதிய உற்சாகத்துடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு பின் முகமது ஷமி எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், தற்போது வரை ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 14, 2024, 21:29 [IST]
Other articles published on Sep 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+