மும்பை : டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பொறுமையாக விளையாட வேண்டும் என்ற காலமெல்லாம் தற்போது மலை ஏறிப் போகிவிட்டது. t20 யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டையும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கும் வீரர்கள் வந்து விட்டார்கள். ஒரு காலத்தில் சராசரியாக ஒரு நாளில் 200 முதல் 250 ரன்கள் அடிப்பார்கள்.
ஆனால் தற்போது அது 400ழ் 500 என்ற லெவலுக்கு சென்று விட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேஸ் பால் என்ற ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த சூழலில் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலை தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிராட் ஓவரை எதிர் கொண்ட பும்ரா, 35 ரன்கள் குவித்தார். இந்த பட்டியலில் மூன்று வீரர்கள் இரண்டாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா வீரர் ராபின் பீட்டர்சன் வீசிய ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா 6 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி , ஆண்டர்சன் வீசிய ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வீரர் கேசவ் மஹராஜ் ஜோ ரூட் வீசிய ஓவரில் 28 ரன்கள் குவித்தார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இரண்டு வீரர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். ஷாகித் ஆஃபிரிடி ஒரே ஓவரில் 27 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பாகிஸ்தான் வீரர் சாகித் மொஹமத் வீசிய ஒரே ஓவரில் 27 ரன்கள் விளாசினார்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் மூன்று வீரர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். இலங்கை வீரர் சுராஜ் லக்ம்ல் வீசிய ஓவரில் நியூசிலாந்து அணியின் பிராண்டன் மெக்குல்லம், ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் மீண்டும் பிரைன் லாரா பிடித்திருக்கிறார். அவர் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனரியா ஓவரில் 26 ரன்கள் விளாசினார்.
இதேபோன்று இலங்கை வீரர் புஷ்பகுமாரா வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா 26 ரன்கள் விளாசி இருக்கிறார். இந்த ஆண்டு இந்திய அணி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் இனி விளையாட இருக்கிறது. இந்த பட்டியலில் கோலி,ரோஹித், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.