Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்த அஸ்வின்.. வரும் நவம்பர் மாதத்திற்குள் முறியடிக்க வாய்ப்பு

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்தி இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டிங்கில் 114 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 11 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்திருக்கிறது. இதில் தான் அஸ்வின் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்து இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஜாம்பவான் முரளிதரன் 11 விருதுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

ind vs ban r ashwin cricket rohit sharma virat kohli


தற்போது அஸ்வினும் 11 தொடர் நாயகன் விருது வென்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். முரளிதரன் 61 தொடர்களில் விளையாடி 11 தொடரில் வென்ற நிலையில், அஸ்வின் 43 தொடர்களில் 11 தொடர் நாயகம் விருதை கைப்பற்றி இருக்கிறார்.இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் காலிஸ் இருக்கிறார்.

அவர் 9 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். நான்காவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான் நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹேர்ட்லி, ஆஸ்திரேலிய வீரர் வார்னே ஆகியோர் தலா எட்டு தொடர் நாயகன் விருது வாங்கி மூன்றாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் வீரர் வசிம் அக்ரம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரபால் ஆகியோர் 7 தொடர் நாயகன் விருது வென்று நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறார். இதில் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் தொடர் நாயகன் விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறார். அஸ்வின் 102 டெஸ்ட் போட்டியில் விளையாடி 527 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் 129 டெஸ்ட்களில் விளையாடி 530 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். லயான் ரெக்கார்டை முறியடிக்க அஸ்வினுக்கு வெறும் நான்கு விக்கெட் தான் தேவை.

Story first published: Tuesday, October 1, 2024, 17:47 [IST]
Other articles published on Oct 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+