மும்பை : பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் முடிவுகள் கிடைக்க ஐந்து நாட்கள் போதாது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக பெரும்பாலும் இருந்ததால் முதல் இன்னிங்ஸ் முடியவே 4 நாட்கள் ஆகிவிடும். இந்த நிலையில் தற்போது ஆடுகளம் முற்றிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது.
மேலும் இந்தியாவில் எதிர் அணியின் 20 விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். இதனால் தற்போது இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் நான்கு நாட்களில் முடிந்து விடுகிறது.

தற்போது சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களுக்குள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் போட்டி ஒரு நான் முன்பே முடிவடைந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் திங்கட்கிழமை தான் கான்பூருக்கு புறப்பட்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக போட்டி முடிவடைந்த உடனே கம்பீர்,ரோகித் சர்மா, விராட் கோலி ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இந்திய குழு சென்னையை விட்டு புறப்பட்டு கான்பூருக்கு சென்றது.
வழக்கத்திற்கு மாறாக இந்தியா ஒருநாள் முன்பாகவே புறப்பட்டது ஏன் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை சிலர் சென்னையில் வெயில் தாங்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் விட்டால் போதும் என்று சென்னையை விட்டு ஓடி விட்டார்கள் என்று கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு கிரிக்கெட் தொடர்பான நுணுக்கம் இருக்கிறது.
போட்டி காலையிலேயே முடிவடைந்து விட்டதால் மாலை புறப்பட்டு இரவே கான்பூர் செல்ல கம்பீர் திட்டமிட்டு இருக்கிறார். இதன் மூலம் இன்று ஒரு நாள் முழு ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த மூன்று நாட்கள் கான்பூர் ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் பயிற்சி முகாமை நடத்தலாம் என்பதே கம்பீரின் திட்டமாக இருக்கிறது.
இதன் மூலம் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் தற்போது பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்கள். இதனால் இந்த மூன்று வீரர்களுக்கும் கூடுதல் பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும் என்பதற்காகவே இந்திய அணி தற்போது ஒரு நாள் முன்பாகவே கான்பூர் சென்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.