Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: அஸ்வினை சேர்க்க வேண்டாம்.. நானே ஆஃப் ஸ்பின் போடுவேன்.. பயிற்சியில் ஈடுபட்ட ஹிட்மேன்!

புனே: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென பயிற்சியின் போது ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, டாப் ஆர்டரில் பந்துவீச்சாளர்களே இல்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நானும் விராட் கோலியும் சில ஓவர்கள் பந்துவீசிவோம் என்று ரோகித் சர்மா நக்கலாக பதில் அளித்தார். அதன்பின் உலகக்கோப்பை தொடங்கியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

IND vs BAN: Rohit Sharma bowling off spin during the Practice ahead of the Bangladesh game

நாளை நடக்கவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்காக 3 நாட்களுக்கு முன்பாகவே இந்திய அணி வீரர்கள் புனே வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் திங்களன்றே பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த பயிற்சியில் அனைத்து வீரர்களும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சியில் அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் பங்கேற்றனர்.

அப்போது விராட் கோலி வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்த்தும், ஸ்ரேயாஸ் ஐயர் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்களிடம் பயிற்சியில் ஈடுபட்டார். அதேபோல் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாமல், திடீரென பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஜடேஜா பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில், அவருக்கு ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ரோகித் சர்மா சில பந்துகளை வீசிவிட்டு, அஸ்வினுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த சில வாரங்களாகவே ரோகித் சர்மா பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.

ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக திடீரென பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வங்கதேச அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இதனால் அஸ்வின் இருந்தாலும், கூடுதலாக இன்னொரு ஆஃப் ஸ்பின்னரை தயார் செய்யும் வகையில் ரோகித் சர்மா பொறுப்பை எடுத்து கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 18, 2023, 9:04 [IST]
Other articles published on Oct 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+