Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - 6வது ஓவரில் ரோகித் சர்மாவை காலி செய்த வங்கதேசம்.. தடுமாறும் இந்தியா

சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யாமல் பந்து வீசுகிறது.

ind vs ban india vs bangladesh cricket rohit sharma

இதற்கு காரணம் இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அது மட்டுமில்லாமல் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்தது. இதனால் முதலில் பந்து வீசினால் அது கூடுதல் சாதகமாக இருக்கும். இதன் காரணமாக தான் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் இந்த முடிவை எடுத்தார்.

இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மாவும் தாங்களும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என்று தெரிவித்தார். இதனால் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி முதல் ஒரு மணி நேரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

வங்கதேச பவுலர்கள் ஆரம்பகட்டத்தில் வீசிய சில பந்துகள் பெரிய அளவில் எந்த ஒரு நெருக்கடியையும் ரோகித் சர்மாவுக்கு ஏற்படுத்தவில்லை. மேலும் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 5.1 வது ஓவரில் வங்கதேச வீரர் ஹசன் அஹமத் வீசிய பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்ட போது ஸ்லீப்பிங் கேட்ச் ஆனார்.

19 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா வெறும் ஆறு ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியின் திரும்பினார். இதனால் இந்திய அணி 14 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. குறைந்தபட்சம் 300 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்சில் எடுத்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 19, 2024, 10:22 [IST]
Other articles published on Sep 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+