Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: ரோஹித் சர்மாவின் கேரியரில் கரும் புள்ளி.. வங்கதேச அணிக்கு எதிராக மோசமான சாதனை

சென்னை: ரோஹித் சர்மா உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக இருக்கிறார். 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 12 சதங்கள், 17 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் தனது முத்திரையை பதித்து இருக்கும் ரோஹித் சர்மா, வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் மிக மோசமாக செயல்பட்டு இருக்கிறார். அவரது கிரிக்கெட் வாழ்வில் அது மட்டுமே ஒரே கரும்புள்ளியாக மாறி உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு எதிராக நல்ல பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக 7.85 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸில் ஆறு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து ரன்களும் மட்டுமே சேர்த்தார்.

ind vs ban india rohit sharma

ரோஹித் சர்மா இது போல ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழப்பது நான்காவது முறை ஆகும். அவர் வங்கதேச அணிக்கு எதிராக இதற்கு முன் 5 இன்னிங்ஸ்களில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். தற்போது சென்னை டெஸ்ட் போட்டிக்கு பின் 7 இன்னிங்ஸ்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி வங்கதேச அணிக்கு எதிராக 7.85 ஆக உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 33.71 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேச அணிக்கு எதிரான பேட்டிங் சராசரிக்கு பின் இதுவே ரோஹித் சர்மாவின் இரண்டாவது குறைந்த பேட்டிங் சராசரி ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 96 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக 50 - ஐ ஒட்டி உள்ளது அவரின் டெஸ்ட் பேட்டிங் சராசரி.

இப்படி முக்கிய அணிகளுக்கு எதிராக நல்ல பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ரோஹித் சர்மா பலம் குறைந்த அணிகளில் ஒன்றான வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த சராசரி வைத்துள்ளது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. மேலும், அவரது கிரிக்கெட் வாழ்வில் இது மட்டுமே மிகப் பெரிய கரும்புள்ளியாகவும் உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி -

இங்கிலாந்து - 26 இன்னிங்ஸ்களில் 1147 ரன்கள் - சராசரி 47.79

தென்னாப்பிரிக்கா - 20 இன்னிங்ஸ்களில் 738 ரன்கள் - சராசரி 38.84

ஆஸ்திரேலியா - 22 இன்னிங்ஸ்களில் 708 ரன்கள் - சராசரி 33.71

வெஸ்ட் இண்டீஸ் - 7 இன்னிங்ஸ்களில் 578 ரன்கள் - சராசரி 96.33

இலங்கை - 12 இன்னிங்ஸ்களில் 509 ரன்கள் - சராசரி 50.90

நியூசிலாந்து - 11 இன்னிங்ஸ்களில் 424 ரன்கள் - சராசரி 53.00

வங்கதேசம் - 7 இன்னிங்ஸ்களில் 55 ரன்கள் - சராசரி 07.85

Story first published: Saturday, September 21, 2024, 18:32 [IST]
Other articles published on Sep 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+