Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்லிப்பை நோக்கி வந்த பந்து.. தயாரான கோலி.. குறுக்கே பாய்ந்த ஹிட்மேன்.. வாயை பிளக்க வைத்த அந்த நொடி!

Recommended Video

India vs Bangladesh, Day-Night Test : Rohit Sharma takes a Catch of Mominul

கொல்கத்தா : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஒற்றைக் கையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகல மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

இந்தியா இந்தப் போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தது. வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இஷாந்த் முதல் விக்கெட்

இஷாந்த் முதல் விக்கெட்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை வங்கதேசம் சமாளிக்குமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கேற்ப 7வது ஓவரில் இஷாந்த் சர்மா அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைத்தார்.

எல்பிடபுள்யூ விக்கெட்

எல்பிடபுள்யூ விக்கெட்

துவக்க வீரர் இம்ருல் கேயஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். அடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் பேட்டிங் செய்ய வந்தார்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை சந்தித்தார் மொமினுல். உமேஷ் வேகத்தில் வளைந்து வந்த பந்து, பிட்ச் ஆகி நேராக வந்தது. பந்தை கணிக்க முடியாத மொமினுல் பந்தை தடுக்க முயன்றார்.

ஸ்லிப் கேட்ச்

பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பை நோக்கி வந்தது. முதல் ஸ்லிப்பில் கேப்டன் விராட் கோலி இருந்தார். அவர் பந்தை பிடிக்க தயாராக கையை வைத்துக் கொண்டார். ஆனால், அதற்குள் இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மா பாய்ந்தார்.

ரோஹித் அசத்தல்

ரோஹித் அசத்தல்

பாய்ந்து வந்த ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு முன் விழுந்து ஒற்றைக் கையில் அந்த கேட்ச்சை பிடித்தார். விராட் கோலி அந்த கேட்ச்சை பிடிக்க முயற்சி செய்திருந்தாலும், அது கடிமானதாகவே இருந்திருக்கும்.

கோலி ரியாக்ஷன்

கோலி ரியாக்ஷன்

ரோஹித் சர்மா பாய்ந்து வந்து கேட்ச் பிடித்ததை பார்த்த கோலி, சிரித்து, கைதட்டி செமயாக ரியாக்ஷன் கொடுத்தார். இந்திய வீரர்கள் அனைவரும் ரோஹித்தை சுற்றி வளைத்து கொண்டாடினர்.

வியந்த ரசிகர்கள்

வியந்த ரசிகர்கள்

ரசிகர்களும் இந்த கேட்ச்சை கொண்டாடி மகிழ்ந்தனர். ரோஹித் சர்மா சூப்பர்மேன் போல பாய்ந்து ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்தார் என புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர்.

பிங்க் பந்தில் கேட்ச்

பிங்க் பந்தில் கேட்ச்

இதில் மற்றொரு முக்கிய விஷயம், பிங்க் பந்தில் இந்திய வீரர் ஒருவர் பிடிக்கும் முதல் கேட்ச் இது தான். அந்த பெருமையையும் தட்டிச் சென்றார் ரோஹித் சர்மா.

ரோஹித் மிரட்டல்

ரோஹித் மிரட்டல்

கடந்த டெஸ்ட் போட்டியில் எளிதான ஸ்லிப் கேட்ச் ஒன்றை தவறவிட்ட ரோஹித்ட், இந்த முறை கோலிக்கு வந்த கேட்ச்சை தாவிப் பிடித்து மிரட்டி இருக்கிறார். இந்தப் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸில் 106 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

Story first published: Friday, November 22, 2019, 19:14 [IST]
Other articles published on Nov 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+