Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, கோலி சாதனைகளை உடைத்து தெறிக்கவிட்ட கேப்டன்.. ஒரே ஓவரில் நடந்த சம்பவம்!

Recommended Video

ஒரு போட்டியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்திய ரோஹித் சர்மா

டெல்லி : இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு முக்கிய சாதனைகளை உடைத்து அசத்தி இருக்கிறார்.

அதிக டி20 போட்டிகளில் ஆடிய சாதனை மற்றும் அதிக டி20 ரன்கள் குவித்தது என இரண்டு முக்கிய சாதனைகளை உடைத்துள்ளார் ரோஹித் சர்மா.

தோனி மற்றும் விராட் கோலியை முந்தி இந்த சாதனைகளை ரோஹித் சர்மா செய்துள்ளார் என்பது தான் சிறப்பு.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸில் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். எனினும், இரண்டு முக்கிய சாதனைகளை செய்துள்ளார்.

அதிக போட்டிகள் சாதனை

அதிக போட்டிகள் சாதனை

முதல் சாதனை அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையை பெற்றது தான். இந்தப் போட்டி ரோஹித் சர்மாவின் 99வது சர்வதேச டி20 ஆகும்.

தோனியை முந்தினார்

தோனியை முந்தினார்

இந்திய அளவில் தோனி 98 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சமன் செய்த ரோஹித், வங்கதேச தொடரில் அதை முறியடித்து இருக்கிறார்.

உலக அளவில் மூன்றாம் இடம்

உலக அளவில் மூன்றாம் இடம்

மேலும், உலக அளவில் அதிக டி20 போட்டிகள் ஆடியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 111 போட்டிகளும், ஷாஹித் அப்ரிடி 99 போட்டிகளிலும் ஆடி உள்ளனர்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

அடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார். 9 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, 2,452 டி20 ரன்கள் குவித்து அந்த சாதனையை செய்தார். விராட் கோலியின் 2,450 ரன்கள் சாதனையை முந்தி முதல் இடம் பிடித்தார் ரோஹித்.

கோலியுடன் போட்டி

கோலியுடன் போட்டி

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்தே அதிக டி20 ரன்கள் குவித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை மாற்றி, மாற்றி பிடித்து வருகிறார்கள்.

ஒரே ஓவரில் அவுட்

ஒரே ஓவரில் அவுட்

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் முதல் ஓவரை மட்டுமே சந்தித்தார். அந்த ஓவரில் இரண்டு ஃபோர் அடித்த அவர், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு ஓவரில் மட்டுமே ஆடினாலும் அதிக ரன்கள் அடித்த சாதனையை முந்தி விட்டார்.

Story first published: Sunday, November 3, 2019, 21:03 [IST]
Other articles published on Nov 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+