Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. இந்த லிஸ்டில் முதலிடம் யாருக்கு தெரியுமா?

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். கேப்டனாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

ஆசிய கோப்பையில் வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டி, டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது என இந்திய அணி அபாரமாக ரோகித் தலைமையில் விளையாடி வருகிறது.

ind vs ban rohit sharma india vs bangladesh

இந்த சூழலில் இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் வெற்றி பெற்றால் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் ஒரு வீரராக ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். ரோகித் சர்மா, விராட் கோலிக்கு முன்பாகவே இந்திய அணிக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கினார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா களம் இறங்கி அபாரமாக விளையாடினார். அதன் பிறகு ரோகித் சர்மா நடுவரிசையில் களமிறங்கி கொஞ்சம் சொதப்பியதால் அணியில் இடம் கிடைக்காமல் போனது.

இந்த சூழலில் தான் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஸ்டார் வீரராக உருவானார். இந்த நிலையில் பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற பின்பு ரோகித் சர்மாவுக்கு 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்க, அதிலிருந்து ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி இல்லை என்ற நிலைக்கு அவர் வந்திருக்கிறார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இதுவரை 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மா அவரை பிண்ணுக்கு தள்ளி 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். ரிக்கி பாண்டிங், இதுவரை 377 சர்வதேச போட்டிகளில் வென்று முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே இருக்கிறார். ஜெயவர்த்தனே 336 போட்டிகளில் வென்று உள்ளார்.இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அவர் 322 போட்டிகளில் வென்று உள்ளார். ரோகித் சர்மா தற்போது நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Sunday, September 22, 2024, 18:28 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+